tamilnadu

img

கோவில் சொத்தை அபகரித்த பாஜக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

புதுச்சேரி, ஜூலை 11- தமிழகம், புதுச்சேரியில் கோவில் களை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பாஜகவினர், கோவில் சொத்துக் களை போலி பத்திரம்மூலம் தன்வசப் படுத்தியுள்ள புதுச்சேரி பாஜக எம்எல்ஏ ஜான்குமார் மீது  நடவடிக்கை எடுக்கா தது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்   அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற காமாட்சிஅம்மன் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்துள்ள குற்றவாளிகளை கைது செய்யக் கோரி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநி லக்குழு சார்பில் பேட்டையன் சத்தி ரத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரில் செவ்வாய்க் கிழமை (ஜூலை 11) பெருந்திரள் ஆர்ப்பாட்டம்   நடைபெற்றது. முன்னதாக புதுச்சேரி  சாரம் பழைய ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து  புறப்பட்ட ஊர்வலத்துக்கு கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது: காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரம் சதுரஅடி நிலத்தை போலி பத்திரம் மூலம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், அவரின் மகனும் சட்டமன்ற உறுப்பினரு மான  ரிச்சர்டு ஜான்குமார் ஆகியோர்  தன்வசப்படுத்தி இந்த மோசடியை  செய்துள்ளனர். இதில் ஜான் குமாரின் உறவினர்கள் 4பேர் சம்பந்தப் பட்டுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் 13 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.   இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பின்னர்  கடந்த இரண்டு ஆண்டு களாக முக்கிய ஆவணங்கள் பத்திரப்  பதிவுத் துறையில் இருந்து  அழிக்கப் பட்டுள்ளன. எனவே இந்த நில மோசடி வழக்கில் 2 பாஜக எம்எல்ஏக் களையும், இதில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்.

அண்ணாமலைக்கு  கேள்வி

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் உள்ள கோவில்களை இந்து அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை, புதுச்சேரியில் கோவில் சொத்துக்களை தன்வசப் படுத்தியுள்ள பாஜக சட்டமன்ற உறுப்பி னர் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

மாநில அரசுகளை சீர்குலைக்கும்  ஒன்றிய அரசு

புதுவையில் நீண்டகாலமாக தனி யார் நிலங்கள், கோவில் நிலங்கள் அப கரிக்கப்பட்டு வருகின்றன.  இந்த நில மோசடிகள் தொடர்பாக அரசு விசார ணைக்குழு அமைக்க வேண்டும். பாஜக அல்லாத மாநில அரசுகளை சீர்குலைக்க ஒன்றிய அரசு ஆளு நர்களை நியமித்து அரசியல் செய்கின்ற னர். கவர்னர்கள் அரசியல் பேசுவதை ஏற்க முடியாது.  காய்கறி விலை உயர்ந்து வருவதில் அரசு தலையிட்டு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமி ழகத்தில் நியாயவிலையில் காய்கறி விற்பனை செய்ய தமிழக அரசு நட வடிக்கை எடுத்துள்ளதை போல்,  புதுச் சேரி  அரசும் நியாயமான விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும். அர சியல்வாதி போல ஆளுநர் பிரச்சாரம் செய்ய அதிகாரம் கிடையாது. எனவே தமிழக ஆளுநரை குடியரசுத்தலைவர் திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசு குடும்பத் தலைவிக்கு உரிமை த்தொகை ரூபாய் ஆயிரம் பெற யார்  தகுதியானவர்கள் என்பது குறித்து அறி வித்துள்ளனர். இத்தொகை  வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பத்திற்கும் வழங்க வேண்டும்.இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். முன்னதாக  போராட்டத்தில் கட்சி யின் புதுச்சேரி மாநில மூத்த தலை வர்  முருகன், மாநில செயற்குழு உறுப் பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், சீனிவாசன், தமிழ்செல்வன், கொளஞ்சியப்பன், பிரபுராஜ், கலியமூர்த்தி, சத்தியா  உட்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக ராஜீவ்காந்தி சிலை, தட்டாஞ்சாவடி விஐபி நகர் வழியாக சென்ற ஊர்வலம்  ஆட்சியர் அலுவலகம் அருகில்  பெருந்திரள் போராட்டத்துடன் முடிவடைந்தது.