tamilnadu

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் இலவச மின்சாரம் ரத்தாகும்!

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் இலவச மின்சாரம் ரத்தாகும்!

மின் ஊழியர் மத்திய அமைப்பு பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் பேச்சு

சென்னை, ஏப்.20- ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் இலவச மின்சாரம் ரத்தாகும் என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் கூறினார். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த உள்ளது. இதற் காக உலகளாவிய ஒப்பந்தத்தை கோரி யுள்ளது. இந்த ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப் பட்டு அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலை யில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு தமிழ்நாடு  மின் ஊழியர் மத்திய அமைப்பு எதிர்ப்பு தெரி வித்துள்ளது. இந்த திட்டத்தின் பாதிப்பு களை விளக்கி சனிக்கிழமை (ஏப்.19) மாநிலம்  முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தியது. மத்திய சென்னை கிளை சார்பில் திரு வல்லிக்கேணியில் நடைபெற்ற பிரச்சாரத் தில் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் பேசியதாவது: பெரும் முதலாளிகளின் லாபத்தை அதி கரிக்க, லாபம் தரும் பொதுத்துறைகளை ஒன்றிய அரசு தனியாருக்கு கொடுத்து வரு கிறது. கோல் இந்தியா என்ற நிலக்கரி நிறு வனத்தின்கீழ் இருந்த 44 சுரங்கங்களை தனி யாரிடம் கொடுத்துவிட்டது.

25 ஆண்டுகளுக் கும் மேலாக அனல் மின்சாரம் உற்பத்தி செய்த இடங்களை தனியாருக்கு சதுர அடி 1  ரூபாய் அளவுக்கு வாடகைக்கு கொடுக்கிறது. இதை குறுக்கு வழியில் செயல்படுத்த நுகர்வோர் சட்டத்தை திருத்தி, மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள மின் வாரியங்களின் தனியார் மயத்தை திணிக்கிறது. தொழிலாளர்களின் அயராத உழைப் பால் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன்  லாஸ் 13.5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. மின் கணக்கீடு, வசூல் செய்வதில்  முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டம், விநியோகப் பிரிவை  தனியார் மயப்படுத்த புகுத்தப்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர்களை தனியார் நிறுவ னங்கள் பொருத்தி பராமரிக்கும். மின் கட்ட ணத்தை அந்த நிறுவனங்களே தீர்மானிக்கும்.  வணிக நிறுவனங்கள், தொழிற்சாலை களுக்கு மாலை 6 முதல் இரவு 9 வரை அதிக பட்ச கட்டணம் வசூல் செய்வது போல் மக்க ளிடமும் வசூலிப்பார்கள்.

மக்களுக்கு எதி ரான ஒன்றிய அரசின் திட்டங்கள் பலவற்றை  மாநில அரசு எதிர்கிறது. அதேபோன்று இந்த  திட்டத்தையும் எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் களை பொருத்த உள்ளனர். இதனால், தற் போது நல்ல நிலையில் உள்ள மீட்டர்கள் அகற்றப்படும். ஸ்மார்ட் மீட்டர்களை கொள் முதல் செய்து தனியார் மூலம் பொருத்தி னால் 475 கோடி ரூபாய் செலவாகும். வாரியத் திற்கு 423 கோடி ரூபாய் கடன் அதிகமாகும். இதற்கு மாறாக, வாரியம் கொள்முதல் செய்து பொருத்தினால் 175 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும். அதை செய்ய மாநில அரசு முன்வர வேண்டும். சட்டமன்றத்தில் நடைபெறும் மானிய கோரிக்கையில் காலிப் பணியிடங்களை நிரப்பவும், தேர்தல் வாக்குறுதிபடி பொதுத் துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்யவும், காலிப் பணியிடங்களை நிரப்ப வும், 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு ஓய்வு பெற்ற வர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் அறி விப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தி  ஏப்.21 அன்று மாநிலம் முழுவதும் மேற் பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார். மத்திய சென்னை கிளைத் தலைவர் வி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் எம்.தயாளன், கிளை பொருளாளர் எஸ்.முருகவேல், மயிலாப்பூர் கோட்டத் தலை வர் எம்.ஜான் ராஜ், செயலாளர் எஸ்.நிருபன்  சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.