ஆக்ஸ்போர்ட் பல்கலை.யில் தந்தை பெரியார் படம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி
சென்னை, செப். 5 – பிரிட்டனுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர், “பல நூறு ஆண்டுகளாக உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் இந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அரங்கத்தில் பேசுவதை நான் பெருமையாக கருதுகிறேன். இங்கே நான் தமிழ்நாட்டின் முதல்வராகவும் திமுகவின் தலைவராக மட்டுமல்ல பெரியாருடைய பேரன் என்கிற கம்பீரத்தோடு வந்துள்ளேன்” என்று நெகிழ்ந்துள்ளார். “பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழ கத்தில் திறந்து வைத்ததை எனது வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். பகுத்தறிவு, உலகம் முழுவதும் பரவி வருவதன் அடையாளம் தான் இந்த படத்திறப்பு நிகழ்ச்சி. பெரியார் இன்று உலகம் முழுவதும் தேவைப்படுகிறார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.