tamilnadu

img

வி.சி. சந்திரகுமார் வேட்பு மனு தாக்கல்

ஈரோடு, ஜன.17- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி யில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். பிப்ரவரி 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை ஒட்டி வெள்ளியன்று திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மாநகராட்சி அலு வலகத்தில் தேர்தல் அலுவலர் மணீஷி டம் வேட்பு மனுவைத் தாக்கல்செய்தார்.  பின்னர் அவர், செய்தியாளர்களி டம் பேசுகையில், “திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை முன்னி றுத்தி போட்டியிடுகிறோம். வர லாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை மக் கள் வழங்குவார்கள்.  ஈரோட்டில் பிறந்து வளர்ந்த எனக்கு தொகு திக்கு என்ன செய்ய வேண்டும் என்று  முழுமையாகத் தெரியும்” என்று தெரி வித்தார். முன்னதாக ஈரோடு பெருந் துறை சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்கள் கே.துரைராஜ், ப.மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சுப்ரமணியன், பி.சுந்தரராஜன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் திரண்டனர். அங்கிருந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.