tamilnadu

img

கந்துவட்டி கொடுமைகளுக்கு முடிவு கட்டுக!

நாகர்கோவில், மே 19-கந்து வட்டி கொடுமைகள் தடுப்பு சட்டம் 2003 ன்படி கந்து வட்டியால் ஏற்படும் கொடுமைகள், சொத்து பறிப்பு, உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கன்னியாகுமரி மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமையால் பலர்உயிரிழந்துள்ளனர் என பத்திரிக்கைசெய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. வங்கிகள் தேசியமயமாக்கப் பட்டதன் நோக்கம் நிறைவேறாததோடு, வங்கிகளில் ஏழை, எளிய மக்கள் சேர்க்கும் பணத்தை பெரும்செல்வந்தர்கள் கொள்ளையடிக்க மத்திய அரசு உதவி வருகிறது. இதனால் ஏழை தொழிலாளர்களும், விவசாயிகளும், மீனவர்களும் அவசரத்தேவைகளுக்காக தனியாரிடமிருந்து, அவர்கள் விதிக்கும் கடுமையான நிபந்தனைகளை ஏற்றுகடன் வாங்கும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். இவ்வாறு கடன் வாங்கும் ஏழை மக்களிடமிருந்து கந்து வட்டி வசூல் செய்வதை தடைசெய்யும் வகையில் தமிழக அரசு, கந்து வட்டி கொடுமைகள் தடுப்பு சட்டம் 2003 நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தை மாநிலம்முழுவதும் அரசு செயல்படுத்தவில்லை. 

மாதவட்டி, வார வட்டி, தினசரிவட்டிஎன்ற பெயரில் கடன் கொடுப்பவர்கள் , கடன் வாங்குபவர்களிடமிருந்து, 100 ரூபாய்க்கு மாதம் 50 ரூபாய் வட்டி வீதம் வசூலிக்கிறார்கள். அதற்காக, எழுதப்படாத ஆவணத்தில் கையெழுத்து பெறுவதும், அவர்களிடம் உள்ள பிறஆவணங்களை பெற்றுக் கொள்வதும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த கொடிய வட்டியை செலுத்த முடியாத நிலையில் கடன்கொடுத்தவர்கள் கடன் வாங்கியவர்களின் உடமைகளை அடியாட் களை வைத்து பறிமுதல் செய்வதும், வீட்டில் உள்ள பெண்களை பணத்திற்காகவும், வட்டிக்காகவும் மானபங்கம் செய்யும் நிலை உருவாகியுள்ளது. இந்த கொடுமைகளை நடக்கும் போது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசும் காவல்துறையும் அமைதியாயிருப்பதோடு, சம்பந்தப்பட்ட கந்து வட்டி காரர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. 