tamilnadu

img

மதுரை மாவட்டத்தில் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

மதுரை மாவட்டத்தில் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

மதுரை, மார்ச் 25- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடை பெற உள்ளதை முன்னிட்டு,  மதுரை மாவட்டத்தில் வாக் காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் கண்காணிப்பு நடவ டிக்கைகள் பல்வேறு வடிவங்  களில் தீவிரமாக மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இதனொரு பகுதியாக புத னன்று, மதுரை மற்றும் திண்  டுக்கல் மாவட்ட ஆட்சியர்  கள் இணைந்து, மதுரை– திண்டுக்கல் மாவட்ட எல்  லையான பரளிபுதூர் பகுதி யில் அமைக்கப்பட்டுள்ள வாகன தணிக்கைச் சாவடி யை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு பறக்கும் படை மற்றும் நிலை யான கண்காணிப்புக் குழு வினர் இரவு - பகலாக வாக னங்களை சோதனை செய்து  வருகின்றனர்.  தேர்தல் காலத்தில் பணம், பொருட்கள் மற்றும்  அனுமதியில்லா பிரச்சாரப்  பொருட்கள் கடத்தப்படுவ தைத் தடுக்க இந்த தணிக்கை கள் மேற்கொள்ளப்படுகின் றன. அதிகாரிகளின் தணி க்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, கண்கா ணிப்பை மேலும் வலுப்படுத்த  தேவையான ஆலோசனை களையும் வழங்கினர். இந்த  ஆய்வில் இரு மாவட்டங்க ளின் காவல் கண்காணிப்பா ளர்களும் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மதிப்பீடு செய்தனர். அதே நேரத்தில், மதுரை  கிழக்கு சட்டமன்றத் தொகு திக்கு உட்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் நடைபெற்ற மக ளிர் சுய உதவிக் குழுக்களின்  சமத்துவ பொங்கல் விழா வில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு, மகளிரு டன் இணைந்து கும்மி அடி த்து, மாட்டு வண்டியில் பய ணம் செய்து வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தி னார். “என் வாக்கு என்  கடமை – 100% வாக்களிப்  போம்” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, பொதுமக்களு டன் இணைந்து உறுதிமொழி யும் எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும், நகர்ப்புற மக்க ளிடையே வாக்குப் பதிவு  விழிப்புணர்வை அதிகரிக் கும் நோக்கில், மதுரையில் கல்லூரி மாணவர்கள் பங்  கேற்ற வாக்காளர் விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது.  யாதவர் ஆண்கள் கல்  லூரி வளாகத்தில் தொடங் கிய இந்த பேரணி, நகரின் முக்கிய பகுதிகள் வழியாக பேங்க் காலனி வரை நடை பெற்றது. பேரணியில் மாண வர்கள் பதாகைகள் மற்றும்  முழக்கங்கள் மூலம் வாக்கின்  முக்கியத்துவத்தை வலியு றுத்தினர். இந்த நிகழ்ச்சிகளில் தேர்  தல் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அதி காரிகளும் கலந்து கொண்டு  விழிப்புணர்வை ஏற்படுத்தி னர். தேர்தல் நேர்மையாக வும், முழுமையான வாக்குப் பதிவை உறுதி செய்யும் நோக்கிலும் இதுபோன்ற நட வடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரி கள் தெரிவித்தனர்.