தந்தை உயிரிழந்த துயரத்திலும் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்
எதிர்கால மேற்படிப்புச் செலவுக்கு அரசு உதவுமா?
மதுரை, மார்ச் 25- தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மனித மனதை உலுக்கும் ஒரு சம்பவம் மதுரையில் புதனன்று நடை பெற்றுள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி யில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் விக்னேஸ்வரன், புதனன்று நடைபெற்ற கணிதப் பொதுத்தேர்வை எழுதுவதற் காக தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகிலுள்ள அமெரிக்கன் கல்லூரி பள்ளி தேர்வு மையத்திற்கு வந்தி ருந்தார். இந்த நிலையில் அவரது தந்தை ஆறுமுகம் உடல்நலக் குறைவு காரண மாக திடீரென உயிரிழந்தார். தந்தை யின் மரணச் செய்தியை அறிந்தபோதி லும், மன உளைச்சலை தாங்கிக் கொண்டு தனது கணிதத் தேர்வை முழுமையாக எழுதி முடித்தார் விக்னேஸ்வரன். தேர்வு முடிந்ததும், உறவினர்களுடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளி மாணவனான விக்னேஸ்வரன், தனது பெயரை கூட முழுமையாக சொல்ல முடியாத அள விற்கு நினைவாற்றல் குறைபாட்டுடன் போராடி வருவதாக ஆசிரியர்கள் தெரி விக்கின்றனர். இத்தகைய சவால்களை சந்தித்து வரும் மாணவனுக்கு தந்தை யின் மரணம் மேலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. “இந்த மாணவன் ஏற்கனவே பல சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார். இப்போது தந்தையின் இழப்பு அவரின் கல்வி மற்றும் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. சமூக மும், அரசும் இந்த மாணவனை கவ னத்தில் கொண்டு உதவி செய்ய வேண் டும்” என்று ஆசிரியர்கள் தெரிவித்த னர். தந்தையை இழந்த துயரத்திலும் கல்வியை விடாமல் தேர்வு எழுதிய இந்த மாணவனின் நிலை, சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் வகையில் உள்ளது. ஆதரவற்ற நிலையில் இருக் கும் விக்னேஸ்வரனுக்கு அரசு மற்றும் சமூக அமைப்புகள் உடனடி உதவி வழங்க வேண்டியது அவசியமாகி யுள்ளது.
