tamilnadu

img

வேளாண் நிதிநிலை அறிக்கைக்கான ஆலோசனைகள் அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் விரிவான கடிதம்!

வேளாண் நிதிநிலை அறிக்கைக்கான ஆலோசனைகள் அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் விரிவான கடிதம்!

தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் சம்மந்தமான ஆலோசனைக் கூட் டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தலைமையில் சென்னையில் செவ்வாயன்று (25.02.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலத் துணைத்தலைவர் டி.ரவீந்திரன் கலந்து கொண்டார். அவர், வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்களாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முன்வைக்கும் ஆலோசனைகள் அடங்கிய விரிவான கடி தத்தை அரசிடம் வழங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப்  பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் கையெ ழுத்திட்டு அளித்துள்ள அந்த கடிதத்தில் கூறப்  பட்டிருப்பதாவது: தரிசு நிலங்களை வழங்குக!

1 நிலமற்ற விவசாயிகளுக்கு சொந்த நிலம் வேண்டுமென்பது பெரும் கனவாகவே உள்  ளது. தமிழ்நாட்டில் இதுவரை உச்சவரம்பு சட்டப்படி சுமார் 2,08,207 ஏக்கரும், அரசு தரிசு நிலம் சுமார் 2,10,039 ஏக்கர் என மொத்தம் சுமார்  4,18,246 ஏக்கர் நிலம் நிலமற்ற விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  மேலும் உள்ள தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டுகிறோம். அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டுகிறோம்.  முழுமையாக தண்ணீர் தேக்குக!

2மாநிலம் முழுவதுமுள்ள 17 பெரிய ஆற்றுப்  பசனமும், 84 பெரிய, சிறிய நீர்பாசன அணை களும், 41,948 ஏரிகள், குளங்களும் உள்ளதாக  தெரியவருகிறது. இவற்றில் ஆண்டுதோறும் 13,962 கோடி கன அடி நீரை நிரப்பிடலாம் என  ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற  பாசன ஆதாரங்களை தூர்வாரி, செப்பனிட்டு முழுக் கொள்ளளவில் தண்ணீரை தேக்குவ தற்கான நடவடிக்கைகளை படிப்படியாக அரசு  மேற்கொள்ள வேண்டுகிறோம்.  ஒன்றிய அரசால் தனியார்மய ஆபத்து?

3ஒன்றிய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டு றவு இணையம் மூலம் கொள்முதல் செய்வ தற்கு மாநில அரசு அனுமதிக்கக் கூடாது என வலி யுறுத்துகிறோம். ஏனெனில், இது படிப்படியாக நெல்கொள்முதலை தனியார்மயமாக்கும் நட வடிக்கையாகும். எனவே, நெல் கொள்முதலை,  தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமே மாநில அரசு செய்திட வேண்டும்.  அரசுப் பயிர்க்காப்பீட்டு நிறுவனம்

4ஒன்றிய அரசின் பயிர்க் காப்பீட்டு திட்டம் பெரிய அளவில் விவசாயிகளுக்கு பயனா ளிக்காமல் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டுவதற்கே பயன்படுகிறது. விவசாயிகளுக்கு முழுவதும் பயிர் இழப்பீடு வழங்கிடும் வகையில் மாநில அரசே பயிர்க்  காப்பீட்டு நிறுவனத்தை துவக்கிட வேண்டும். வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்க ளுக்கும் இழப்பீடு வழங்கிடும் வகையில் பயிர்க்  காப்பீடு திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். 2006 வன உரிமைச் சட்டப்படி பட்டா!

5 புதிய திட்டங்கள், தொழில் வளர்ச்சி களுக்காக  நன்கு விளையக்கூடிய விளை நிலங்களை விவசாயிகள் ஒப்புதல் இன்றி அரசு  கையகப்படுத்துவதை தவிர்த்திட வேண்டுகி றோம். காலம் காலமாக வனநிலங்களில் வசித்து  சாகுபடி செய்து வரும் விவசாயிகளை நிலத்திலி ருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிடாமல் 2006 வன உரிமைச் சட்டத்தின் படி அவர்களுக்கு பட்டா வழங்கிட வேண்டுகிறோம்.  மரவள்ளிக் கிழங்கிற்கு விலை

6 சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், தர்ம புரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 21 மாவட்டங்க ளில் நடப்பாண்டு 3 லட்சம் ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந் தாண்டு 1 டன் மரவள்ளி கிழங்கு ரூ. 16000  வரை கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டு  விலை வீழ்ச்சி அடைந்து ஒரு டன்னுக்கு 5 ஆயி ரம் வரை தான் விலை கிடைப்பதால் விவசாயி கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். எனவே,  அரசு ‘சேகோ செர்வ்’ மூலம் கொள்முதல் செய்வ தற்கும் மரவள்ளிக் கிழங்குக்கு உரிய விலை கிடைப்பதற்கும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.  கரும்புக்கும் பரிந்துரை விலை 7 நெல்லுக்கு ஒன்றிய அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையோடு சேர்த்து  மாநில அரசும் குவிண்டாலுக்கு ரூ. 3,000, கரும்பு  ஒரு டன்னிற்கு ரூ. 5,000 விலையாக அறிவித்தி டுமாறு வேண்டுகிறோம். மாநில அரசு கரும்புக்  கான பரிந்துரை விலை (State Advised Price)  அறிவித்து வழங்கிட வேண்டுகிறோம். சர்க்கரை ஆலைகளைத் திறந்திடுக!

8திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புதுப்பித்து மேம்படுத்திட வேண்டும். மதுரை  நேசனல், அமராவதி, ஆம்பூர், என்.பி.கே.ஆர்  ஆகிய மூடியுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை களை திறந்து செயல்படுத்திட வேண்டும். கூட்டு றவு சர்க்கரை ஆலைகளில் தொழிலாளர்கள், அதிகாரிகள் எண்ணிக்கை பெருமளவு குறைந் துள்ளது. தேவைக்கு ஏற்ப தொழிலாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகளை பணியமர்த்திட வேண்டும். டெல்டாவில் வேளாண்  பொறியியல் கல்லூரி

9விவசாயத்தில் தற்போது அனைத்து வேலை களுக்கும் இயந்திர பயன்பாடுகள் அதிக ரித்துள்ள நிலையில், வேளாண்மை பொறி யியல் கல்லூரி - மற்றும் ஆராய்ச்சி நிலையங்  களை டெல்டா மாவட்டத்தில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் துவக்கிட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம். மாடித் தோட்டங்களுக்கு விதைகள்

10இயற்கை வேளாண்மையை மேற்  கொள்ளும் விவசாயிகளை ஊக்கப்  படுத்திடும் வகையில் தொடர்ந்து 3 ஆண்டு களுக்கு மானியம் வழங்கிட வேண்டும். குடி யிருப்பு இடங்களிலும், மாடியிலும் காய்கறித்  தோட்டங்கள் அமைப்பது குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும். தேவையான விதைகளை வேளாண்மைத்துறை மூலம் வழங்கிட வேண்டுகிறோம்.  ரப்பருக்கு குறைந்தபட்ச விலை

11கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதான சாகுபடியாக உள்ள ரப்பருக்கு உரிய விலை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. எனவே, கேரளத்தைப் போன்று ரப்பருக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்திட வேண்டும். ரப்பர் ஆராய்ச்சி மையத்திற்கு இடம்  தேர்வு செய்யப்பட்டும் இதுவரை துவங்காமல் உள்ளது. உடன் துவங்கிட வேண்டுகிறோம். ‘கார்பன் நியூட்ரல் காபி’

12பச்சைத் தேயிலைக்கு கிலோவிற்கு குறைந்தபட்சம் ரூ. 35 விலை வழங்கு வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற் கொள்ள வேண்டுகிறோம். அதேபோல், நீல கிரி, கொடைக்கானல், சேர்வராயன் (ஏற்காடு) மலைகளில் தரமான காபி விளைகிறது. மாநில  அரசு “கார்பன் நியூட்ரல் காபி” அமைப்பை துவங்கி அரசே காபியை கொள்முதல் செய்து  மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றி, விற்பனை செய்து, அதன் பலனை விவசாயிகளுக்கும் வழங்கிட வேண்டுகிறோம். சிறு, குறு,  நடுத்தர காபி விவசாயிகளை ஊக்கப்படுத்திட ஒரு கிலோவிற்கு பத்து ரூபாய் ஊக்கத்தொகை யாக மாநில அரசு வழங்கிட வேண்டும். ரேசனில் தேங்காய் எண்ணெய்

13ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெ ய்யை முதல்கட்டமாக 5 மாவட்டங்க ளில் விற்பனை செய்திட ஏற்கெனவே மாநில  அரசு அறிவித்திருந்தது. இதை படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் விரிவுபடுத்திட வேண்டுகிறோம். கொப்பரைத் தேங்காயை ஆண்டுமுழுவதும் கொள்முதல் செய்வதற்கு ஒன்றிய அரசிற்கு மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும்.  கால்நடை மேய்ப்புக்கு தடை கூடாது

14தமிழ்நாட்டில் வன உயிரினங்களால் குறிப்பாக காட்டுப் பன்றிகளால் விவ சாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு  காண மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு 09.01.2025ல் பிறப்பித்த உத்தரவில் வன ஓரங்களில் விவசாயிகள்  மாடு வளர்க்கக் கூடாது, வனப்பகுதிகளில் கால்  நடைகளை மேய்க்கக் கூடாது என்று பரிந்து ரைத்திருப்பது, ஏற்புடையதல்ல இது போன்ற  பரிந்துரைகளை திரும்பப் பெற வேண்டுகி றோம். மே இறுதிக்குள் தூர்வாரும் பணி

15மேட்டூர் அணையில் 110 அடி வரை  நீர்இருப்பு உள்ள நிலையில் எதிர்வரும்  குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-இல் அணையை  திறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஏப்ரல் மற்றும் மே மாத இறுதிக்குள் தூர்வாரிடும் பணி களை முடிப்பதற்கான நடவடிக்கைகளை மாநில  அரசு மேற்கொள்ள வேண்டுகிறோம். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி செப்பனிட சிறப்பு திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டுகிறோம்.  தமிழகத்தில் என்பிஎப்ஏஎம் கூடாது

16ஒன்றிய அரசின் வேளாண் சந்தைப்படுத்  தலுக்கான தேசிய கொள்கை கட்ட மைப்பு (National Policy Framework for Agricultural Markets - NPFAM) கொள்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றிட வேண்டுகிறோம். அதனை (NPFAM) தமிழ்நாட்டில் அமல்படுத்திடக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம். நாட்டு இன கால்நடைகள் பாதுகாப்பு 17தோட்டக்கலைத் துறை ஆராய்ச்சி மையங்களை விரிவுபடுத்த வேண்டும். குமரி மாவட்டம் விசுவாசபுரம் மலர் ஆரா ய்ச்சி மையத்தை விரிவுபடுத்திட வேண்டும். கோலட்டி பட்டுப்பண்ணையை விரிவாக்கம் செய்ய வேண்டும். மத்திகிரி கால்நடைப் பண்ணையை விரிவாக்கம் செய்து, நாட்டு இன கால்நடைகளை பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.