tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அமைச்சர் சவால்

சென்னை: ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வேளையில், நிர்மலா சீதாராமன் வாய்க்கூசாமல் உண்மையை மூடி மறைப்பது வேதனைக்குரியது. எங்கள் நிதி  அமைச்சரோடு, ஒன்றிய நிதியமைச்சரை வாதிட சொல்லுங் கள் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு சவால் விடுத்து உள்ளார்.

மேலும் ஒருவர் கைது

நெல்லை: நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது  செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு உதவியதாக பீ முகமது என்பவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள் ளனர்.

318 பேர் கண்டுபிடிப்பு

சென்னை: 318 போலி பட்டியல் வணிகர்கள், ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு 2 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக வணிக வரித் துறை தெரி வித்துள்ளது.  அதிகரிக்கும் நாய்க்கடி பாதிப்புகள் சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 3 மாதத்தில் 4 பேர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டில் மொத்தம் 4.8 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவானது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது. மனநலம் சரியில்லை சென்னை: தமிழகத்தில் நிகழும் சாதி ஆவணப் படு கொலைகளுக்கு திருமாவளவன்தான் காரணம் என்று கூறி யிருக்கும் பாஜக தலைவர் எச். ராஜாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் சுப. வீரபாண்டியன், “மநுநீதியால் ஏற்பட்ட சாதிய ஏற்றத்தாழ்வுகள்தான் ஆணவப் படுகொலை களுக்கு காரணம் என்றும், அவருக்கு மனநலம் சரி யில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

மறைமுக எச்சரிக்கை

சென்னை: ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்தால் பக்ரீத் காலம்; ஒரே ஒரு ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் தேர்தல் காலம். பள்ளப் பட்டி உள்ளே வந்துவிட்டு ஆடு வெளியே செல்ல முடியாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். பாங்காக்கிற்கு அனுப்பி வைப்பு மதுரை: கடந்த மார்ச் 19 அன்று கொழும்புவில் இருந்து  மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடைமை களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது வேலூரை சேர்ந்த சசிக்குமார் என்பவர் கொண்டு  வந்த பெட்டியில், இந்திய வனத்துறையால் தடை செய்யப்பட்ட  அரிய வகை ஆமைகள் 52, பல்லிகள் 4, குட்டி பாம்புகள் 8  என 64 வன உயிரினங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில்  இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து மதுரைக்கு கொண்டு வரப்பட்டது தெரிந்தது. இதையடுத்து சசிக்குமாரிடம் சுங்கத்துறையினர் தீவிர விசாரணை மேற் கொண்டு அவரை கைது செய்தனர். மேலும், அந்த அரிய வகை வன உயிரினங்கள் மீண்டும் கொழும்பு வழியாக ஞாயி றன்று பாங்காக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

2026 தேர்தல்: கமல் ஆலோசனை

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. கட்சியின்  தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில்,  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து  நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.

கூடுதல் பெட்டிகள் இணைக்க முடிவு

சென்னை: கோடை விடுமுறையின்போது, விரைவு ரயில் களில் தேவைக்கு ஏற்ப 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களில் படிப்படி யாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன.  தேவைக்கு ஏற்ப, முக்கிய வழித்தடங்களில் செல்லும் விரைவு  ரயில்களில் 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க  நடவடிக்கை எடுக்கப்படும். ரயில்களில் முன்பதிவு, காத்திருப் போர் எண்ணிக்கை பட்டியலை தெற்கு ரயில்வே தயாரித்து வருகிறது. இதன் அடிப்படையில், திருநெல்வேலி, நாகர்கோ வில், கோவை உட்பட பல்வேறு விரைவு ரயில்களில் கூடுதல்  பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு  ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.