tamilnadu

img

கியூப ஒருமைப்பாட்டு விழா - பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு தொடக்க விழா

கியூப ஒருமைப்பாட்டு விழா - பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு தொடக்க விழா 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி பங்கேற்பு

‘சோசலிச கியூபாவை பாதுகாப்போம், ஏகாதிபத்திய சதிகளை முறியடிப்போம்’ என்ற முழக்கத்தோடு கியூப ஒருமைப்பாட்டு விழா மற்றும் பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு தொடக்க விழா செவ்வாயன்று (ஆக.12) சென்னையில் நடைபெற்றது. கியூபா ஒருமைப்பாட்டு தேசியக் குழு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநிலம் முழுவதும் திரட்டப்பட்ட 25 லட்சம் ரூபாயை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபியிடம், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், கியூபா ஒருமைப்பாட்டுக்குழு மாநிலத் தலைவர் திரைக்கலைஞர் ரோகிணி ஆகியோர் வழங்கினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, கியூப தூதர் யுவான் கார்லோஸ் மார்சன் அகிலேரா, அமைச்சர் பி.கே. சேகர்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மூத்த பத்திரிகையாளர் என். ராம், கியூபா ஒருமைப்பாட்டுக்குழு மாநிலத் தலைவர் திரைக்கலைஞர் ரோகிணி, செயலாளர் ஐ. ஆறுமுக நயினார், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.