tamilnadu

img

அமெரிக்கா, ஒன்றிய அரசை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அமெரிக்கா, ஒன்றிய அரசை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு  டிரம்ப், இந்தியர்களை விலங்கிட்டு மோசமான முறையில் வெளியேற்றி, மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள் ளார். இந்தியர்களை பாதுகாக்கக் கோரியும், மனித உரிமையை மீறிய அமெரிக்க அரசையும், இதுகுறித்து எதையும் கண்டு கொள்ளாமல் மௌனமாக இருக்கும் ஒன்றிய மோடி அரசையும் கண்டித்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு மாவட்டத் தலைவர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அகஸ்டின் கண்டன உரை நிகழ்த்தினார். கிருஷ்ணகுமார், பிரகாஷ், பாண்டியன் காளீஸ்வரன், பத்மநாபன் ஆகியோர்கள் கலந்து கொண்டு அமெரிக்கா மற்றும் ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.