tamilnadu

img

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சிபிஎம் பேச்சுவார்த்தைக் குழு சந்திப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சிபிஎம் பேச்சுவார்த்தைக் குழு சந்திப்பு

மதுரை மாநாட்டுத் தீர்மானத்தின்படி, கொள்கைப்பூர்வமாக நிற்போம் : பெ.சண்முகம்

சென்னை, மார்ச் 22 - முதல்வரும் திமுக தலைவரு மான மு.க.ஸ்டாலினுடன் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமை யிலான குழு, ஞாயிறன்று (மார்ச் 22)  அண்ணா அறிவாலயத்தில் தொகுதி எண்ணிக்கை பங்கீடு குறித்து சந்திப்பு  நடத்தியது. இதன்பின் செய்தியாளர் களிடம் பெ.சண்முகம் கூறியதாவது: மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக பயணித்து வரு கிறது. 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணியில் தொடர்ந்து பயணிக்கும். இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்டு வற்புறுத்தி வந்தோம். கூட்ட ணியில் புதிதாக பல கட்சிகள் சேர்ந்துள்ள நிலையில் கூடுதல் தொகுதி தருவது சிரமம் என்றும், தொகுதிகளை குறைத்துக் கொள்ள வேண்டுமென்றும் திமுக தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. மாநிலக்குழு கூட்டம் இத்தகைய சூழலில், மார்க்சிஸ்ட்  கட்சியின் மாநிலக்குழு கூடி விவா தித்தது. 6 தொகுதிக்கு மேல் வற்பு றுத்த வேண்டாம்; 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 6 என்ற எண்ணிக்கையை பெற முயற்சிக்க வேண்டும் என்று பேச்சு வார்த்தைக் குழுவிற்கு அதிகாரம் அளித்தது. இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில், மார்ச் 21 அன்று கட்சியின்  பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி உள்ளிட் டோர் கலந்து கொண்ட மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. 6 என்ற எண் ணிக்கையில் உடன்பாடுசெய்து கொள்ள இறுதி முடிவு எடுக்கப்பட்டது. முதல்வர் அழைப்பு இத்தகைய சூழலில் நேரடியாக சந்தித்துப் பேசி தொகுதி உடன்பாடு காண முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைத்தார். அதனடிப்படையில் அவர் உள்ளிட்ட பேச்சுவார்த்தைக் குழுவினருடன் சிபிஎம் பேச்சு வார்த்தைக்குழு சந்தித்துப் பேசி னோம். அப்போது, தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் திமுகவிற்கு உள்ள சிரமங்களை மு.க.ஸ்டாலின் பகிர்ந்து கொண்டு, மார்க்சிஸ்ட் கட்சி அணியில் நீடிக்க வேண்டும்,  5 தொகுதி என்ற எண்ணிக்கையை ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 6 என்ற எண்ணிக்கைக்கு ஒப்புதல் வழங்கத்தான் மாநிலக்குழு அதிகாரம் அளித்துள்ளது, 5 என்ற எண்ணிக்கை மீது உடனடியாக முடிவெடுக்க முடியாது என்ற சிரமத்தை தெரிவித்தோம். அதற்கு அவர், உங்கள் கமிட்டியில் பேசி சாதகமான முடிவை எடுக்க வேண்டும்; அது அணி தொடர்வதற்கும், 2026 சட்டமன்றத் தேர்தலை ஒருங்கிணைந்து சந்திக்க வும் நிச்சயம் பயன்படும் என்றார். இது குறித்து கட்சியின் மாநிலச் செயற் குழுவில் விவாதித்து முடிவை உரிய முறையில் தெரிவிப்பதாக தெரிவித் தோம். இதுகுறித்து மாநிலச் செயற்குழு கூடி முடிவெடுக்கும். இவ்வாறு பெ.சண்முகம் கூறினார். பரிசீலிப்போம்! இதைத் தொடர்ந்து செய்தி யாளர்களின் பல்வேறு கேள்வி களுக்கு பெ.சண்முகம் அளித்த பதில்கள் வருமாறு: இத்தனை நாட்களாக பேச்சு வார்த்தை நடைபெற்றாலும் இன்று நடைபெற்றதுதான் தொகுதிகள் எண்ணிக்கை தொடர்பாக திமுக தலைவருடனான முதல் சந்திப்பு. அவரின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து பேசுவோம். காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதி கொடுத்தது, புதிய கட்சி களின் வருகையால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை முதல்வர் தெரிவித் தார். 2021 தேர்தலில் சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஒரே எண்ணிக்கையில்தான் தொகுதி வழங்கப்பட்டது. அனைவரும் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளும் நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியும் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். அதைப் பரிசீலிப்போம். கடந்த தேர்தலில், சிபிஎம் வலுவாக உள்ள கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங் களில் இடங்களை ஒதுக்கீடு செய்யவில்லை. அவ்வாறு ஒதுக்கீடு செய்திருந்தால் 6 இடங்களிலுமே வெற்றி பெற்றிருப்போம். அது இப்போது தேவையற்ற விவாதம்.  பாண்டிச்சேரி மாநில தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்து ஏதும் பேசவில்லை.  கொள்கைப் பூர்வமாக... மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்துதான் 2026 சட்ட மன்றத் தேர்தலை மார்க்சிஸ்ட் கட்சி சந்திக்கும். தொகுதி எண்ணிக்கை யை குறைக்கக் கூடாது என்று போராடுவது வேறு; அதற்காக வேறுவிதமான முடிவுகள் எதற்கும் மார்க்சிஸ்ட் கட்சி செல்லாது. கூட்டணியில் இருப்போம் என்ற உத்தரவாதத்தால்தான் எண்ணி க்கையை குறைக்க திமுக அழுத்தம் தருவதாக நாங்கள் நினைக்க வில்லை. கொள்கைப் பூர்வமாக, அகில இந்திய மாநாட்டு தீர்மான த்தின் அடிப்படையில் அணியில் நீடிக் கிறோம். எத்தனை தொகுதிகளை கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அணியில் நீடிப்பதா, வேண்டாமா என முடிவு செய்வ தல்ல மார்க்சிஸ்ட் கட்சி. தொகுதி எண்ணிக்கை உடன்பாடு ஏற்பட்டபிறகு, விருப்ப தொகுதி பட்டியலை கொடுப்போம். சென்னையும் தமிழ்நாட்டில்தான் உள்ளது. சென்னையிலும் போட்டி யிட விரும்புகிறோம். கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ள நிலையில், தொகுதி ஒதுக்கீடு  பேச்சுவார்த்தை பல நாட்களாக நீடிப்பது தவிர்க்க முடியாத ஒன்று.  இவ்வாறு அவர் பதிலளித்தார். இச்சந்திப்பின்போது மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க.கனக ராஜ், கே.சாமுவேல்ராஜ், எஸ். கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். (ந.நி.)