மதுரை:
மதுரை மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் அருகில் ஒரு பிரபல மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த 28 நாட்களுக்கு முன் திருவில்லிபுத்தூரை சேர்ந்தசிவக்குமார் (49) என்பவரை உடல்நிலைசரியில்லை என்று சேர்த்துள்ளார்கள். அவரை பரிசோதனை செய்ததில் இருமல், சளி தொந்தரவு இருந்துள்ளது. அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள் ளது. எனவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நோய் தொற்றுஉறுதி செய்யப்பட்டது.
பின்னர் மருத்துவமனை நிர்வாகம்,6 லட்சம் ரூபாய்க்கு பேக்கேஜ் உள்ளது;அதில் நீங்கள் சேர்த்து விடுங்கள்; 15 தினங்களில் சரியாகி வீடு திரும்பி விடலாம் என்று தெரிவித்துள்ளது. இந்தநிலையில் அவர்கள் 6 லட்சம் ரூபாய் செலுத்தி சிகிச்சை மேற்கொள்ள சொல்லியுள்ளார்கள். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சிவகுமார் வீட்டில்உள்ள நபர்களுடன் பேசி வந்துள்ளார். உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் உடல்நிலை மோசமடைந்து இறந்து விட்டதாக உறவினர்கள் கூறுகிறார்கள். ஆனால் மருத்துவமனையில் அவர் சற்று மயக்க நிலையில் இருக்கிறார். செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது என்று உறவினர்களிடம் கூறியுள்ளார்கள். அடுத்தகட்ட சிகிச்சைக்கு மொத்தம் ரூ.20 லட்சம்கட்டச் சொல்லியுள்ளனர். மேலும் சிகிச்சைக்கான மருந்துகளை வாங்கித் தரும்படி மருத்துவமனையினர் கூறியுள்ளார்கள். மூன்று தினங்களாக மருந்துகள் வாங்கிக் கொடுத்த நிலையில் அவர் இறந்துவிட்டார். இந்நிலையில், உடலை பெற வேண்டுமென்றால் ரூபாய் 7 லட்சம் கட்ட வேண்டும் என்று புதனன்று காலை மருத்துவமனை நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்துள்ளது.
ஆட்சியரிடம் புகார்
இந்த நிலையில் புதனன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த சிவகுமாரின் மனைவி காளீஸ்வரி கூறுகையில், கொரோனா சிகிச்சைக்கு என்றுமுதலில் ரூ.6 லட்சம், பின்னர் இரண்டாவது முறை ரூ.13 லட்சம் கட்டப்பட் டுள்ளது. தற்போது என் கணவர் 28 நாட்கள் மருத்துமனையில் இருந்து சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில் 7 லட்சத்தை கட்டினால்தான் உடலை கொடுப்போம் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறிவருகிறது. என்னுடைய தாலியை கூட கழற்றி கொடுக்கின்றேன், உடலை கொடுங்கள் என்று கூறினேன்; ஆனால் பணம் தான் கட்ட வேண்டும் என்று கூறிவிட்டார்கள். எனவேமதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து எனது கணவரின் உடலை பெற்று தரும்படி மனு அளிக்க வந்தோம் என்றார்.