சென்னை,ஜன,12- எங்கிருந்தாலும் நீங்கள் உங்களது அடையாளத்தை விட்டுவிடாதீர்கள்.எந்த தூரமும் தமிழில் இருந்து நம்மை தூரப்படுத்திவிடக்கூடாது என்று அயலகத் தமிழர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டு கோள் விடுத்தார். அயலகத் தமிழர் தினத்தை முன் னிட்டு, சென்னை நந்தம்பாக்கத்தில் அயலகத் தமிழர் தின விழா ஞாயிற் றுக்கிழமை (ஜன.12) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விருதுகளை வழங்கிப் பேசிய முதலமைச்சர், அயல கத் தமிழர்களால் பாலைவனம்சோலை வனமாகியதாகத் தெரிவித்தார். எந்த வெளிநாட்டுக்குச் சென்றா லும் தாயகத்தில் இருக்கும் உணர்வை அயலகத் தமிழர்கள் கொடுத்ததாகக் கூறிய முதலமைச்சர், எந்த தூரமும் தமிழில் இருந்து நம்மை தூரப்படுத்தி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். அயல்நாட்டு தமிழர்கள் மற்றும் தமிழ் சங்கங்களுக்கும் தமிழ்நாட்டுக் கும் இடையே உறவுப்பாலமாக செய லாற்றும் அயலகத் தமிழ் இளைஞர் ஒருவருக்கு, “சிறந்த பண்பாட்டுத் தூதுவர்” என்ற விருதையும் இந்த ஆண்டு முதல் வழங்கியுள்ளோம்! இது எல்லாவற்றையும்விட, என் மனதுக்கு நெருக்கமான ஒரு திட்டம் இருக்கிறது. இதுதான், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் புலம்பெய ர்ந்த தமிழர்களின் வழித்தோன்றல் களை, தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து, அவர்களின் வேர்கள் பரவி இருக்கும் கிராமங்களை அடையாளம் காட்டும் “வேர்களைத் தேடி” திட்டம். தமிழ் மண்ணில் அவர்களின் சொந் தங்களை கண்டுபிடித்து, கண்ணீர் மல்க பாசத்தை கொட்டிய சிலிர்ப்பூட் டும் அனுபவங்களை உருவாக்கிய திட்டம்தான் இது! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், என் அரசியல் வாழ்க்கையில் இந்தத் திட்டம் ஒரு மைல்கல்! என்றும் தெரிவித்தார். ரூ.10 கோடியில் சிறப்பு திட்டம் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நாட்டுப்புற கலைகளை பயிற்று விக்கும் சிறப்பு திட்டத்திற்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள் ளார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க.பொன்முடி, தா.மோ.அன்பரசன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்,ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர், தலை மைச் செயலாளர் என். முருகா னந்தம், மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.