நூல் அறிமுக விழா புதுக்கோட்டை
, மார்ச் 16- ‘மக்கள் மனங்களில் வாழும் மகத்தான தலைவர் தோழர் ஆர்.கருப்பையா’ என்ற நூல் அறிமுக விழா புதுக்கோட்டை செம்பியன் சமுதாயக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மலர்தரு, விதைக்கலாம் ஆகிய அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு கவிஞர் கஸ்தூரி ரெங்கன் தலைமை வகித்தார். நூல்குறித்து புதுக் கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகி என்.கண்ணம்மாள், வடகாடு தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளி நிர்வாகி ராஜா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் மாணிக்கத்தாய் ஆகியோர் பேசினர். முன்னதாக கவிஞர் மைதிலி வரவேற்க, எஸ்.நடராஜன் நன்றி கூறினார். நிகழ்வை கவிஞர் நிறைமதி தொகுதி வழங்கினார். கவிஞர்கள் ஸ்டாலின் சரவணன், மு.கீதா, பூவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
. வன்கொடுமை சட்டம்: விழிப்புணர்வுக் கூட்ட்டைடம் புதுக்கோ
, மார்ச் 17- புதுக்கோட்டை மாவட்ட அளவிலான வன்கொடுமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலை மையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பின்னர் அவர் பேசும்போது, புதுக்கோட்டை மாவட்டத் தில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்குகள் குறித்தும், அதன்மீது மேற்கொள்ளப் பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தி டும் வகையில் பணிகளை மேற்கொள்ள தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், வரு வாய் கோட்டாட்சியர்கள் பா.ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), ச.சிவக்குமார் (அறந்தாங்கி), அ.அக்பர்அலி (இலுப்பூர்), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சர்வதேச மகளிர் தினம்
மனித சங்கிலி பேரணி கருத்தரங்கம்
நாகப்பட்டினம், மார்ச் 16 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மனிதச் சங்கிலி இயக்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் வே.சித்ரா தலைமையில், நாகையில் நடைபெற்றது. மகளிர் துணைக்குழு உறுப்பினர் என்.அமுதா வர வேற்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் சு.வளர் மாலா “மானமும் அறிவும் மகளிருக்கு அழகு” என்ற தலைப்பில் துவக்கவுரையாற்றினார். “இனியொரு விதி செய்வோம்” என்ற தலைப்பில் மகளிர் துணைக்குழு உறுப்பினர்கள் ந.ஜமுனாராணி மற்றும் சி.ஜோதிலெட்சுமி ஆகியோரும், “வையத் தலை மையில் பெண்கள்” என்ற தலைப்பில் மாவட்ட இணைச் செயலாளர்கள் ஜெ.ஜம்ருத்நிஷா மற்றும் டி.செந்தமிழ்ச் செல்வி ஆகியோர் உரையாற்றினர். “சங்கப் பணி நேற்று, இன்று, நாளை” என்ற தலைப்பில் முன்னாள் மாவட்டத் தலைவர் பா.ராணி கருத்துரையாற்றினார். “திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண் ணியம்” என்ற தலைப்பில் மாநில துணைத் தலைவர் மு.செல்வராணி நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் டி.சசிகலா நன்றி கூறினார். முன்னதாக, நாகப்பட்டினம் நீதிமன்ற வளாகம் முன்பு மகளிர் பங்கேற்ற மனிதச் சங்கிலி நடைபெற்றது. 80 பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.