புதுதில்லி, டிச.11- அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துவிட்டு, ராமர் கோயில் கட்டி யதைப் போல, மதுராவில் கியான் வாபி மசூதியை இடித்துவிட்டு, கிருஷ்ணர் கோயில் கட்டுவதும் பாஜக உள்ளிட்ட சங்-பரிவாரங்க ளின் திட்டமாகும். இதேபோல நாடு முழுவதும் ஏராளமான மசூதிகளை சங்-பரிவாரங்கள் குறிவைத்துள் ளன. அயோத்தி, வாரணாசியை போல மதுராவிலும் விரைவில் பிரம்மாண்ட கோயில் கட்டப்படும் என்று உத்தரப்பிரதேசத்தின் பாஜக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கடந்த வாரம் பகிரங்க மாகவே டுவிட்டரில் பதிவிட்டார். ஆனால், தங்களின் இந்த திட் டத்திற்கு, மதவழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் குறுக்கே இருப்ப தால், அதனை ரத்து செய்வதற்கு பாஜக தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறது. இதற்காக எம்.பி.க்கள் மூலம் நாடாளுமன்றத்தில் பாஜக கூக்குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளது.
கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வழிபாட்டுத் தலங்கள் எந்த நிலையில் இருந்தனவோ, அவை அப்படியே தொடரும் என்பது தான் மதவழிபாட்டுத் தலங்கள் பாது காப்புச் சட்டம் கூறுவதாகும். 1991-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, இனிமேல் இதுபோல வேறெந்த வழி பாட்டுத் தலங்களும் நாட்டில் இடிக்கப்படக் கூடாது என்பதற்காக, மதவழிபாட்டுத் தலங்கள் பாது காப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தைத்தான் பாஜக தற்போது ரத்து செய்ய திட்டமிட்டுள் ளது. கடந்த திங்கட்கிழமையன்று பல்லியா தொகுதி பாஜக எம்.பி. குஷ்வாகா நாடாளுமன்றத்தில் பேசும்போது, “வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்போது, ஏன் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் திரும் பப் பெறப்படாது?” எனக் கேள்வி எழுப்பினார். இதையே ஹர்நாத் சிங் யாதவ் என்ற மற்றொரு பாஜக எம்.பி.யும் தற்போது நாடாளுமன்றத்தில் கிளப்பியுள்ளார். மதுராவில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ஸ்ரீகிருஷ் ணர் கோயில் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
“வெளிநாட்டிலிருந்து படை யெடுத்து வந்து கிருஷ்ணரின் பிறந்த இடத்தை கைப்பற்றியவர்களுக்கு அரசு சட்டப்பூர்வ பாதுகாப்பு அளித் துள்ளது. சமத்துவம், சமத்துவ வாழ்க்கைக்கு எதிரானதாக வழி பாட்டுத்தலங்களுக்கான சட்டம் இருக்கிறது” என்று ஹர்நாத் சிங் மாநிலங்களவையில் பேசியுள்ளார். “இந்துக்கள், சமணர்கள், சீ்க்கி யர்கள், பவுத்தர்களின் உரிமையைப் பறிப்பதாக இந்தச் சட்டம் இருக்கி றது” என்றும் முதலைக் கண்ணீர் வடித்துள்ளார். அவரின் இந்தப் பேச்சுக்கு, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும், மாநிலங்களவைத் தலைவர் வெங் கையா நாயுடு அனுமதி அளித்ததால், ஹர்நாத் சிங் யாதவ் தடையின்றி தனது பேச்சைத் தொடர்ந்தார். மதப் பிரிவினை பேச்சை எப்படி அனு மதித்தீர்கள்?
என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதற்கு, வெங் கையா நாயுடு அனுமதி அளித்து விட்டதால், தான் எதுவும் செய்ய முடியாது என்று மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் பதி லளித்துள்ளார். இந்நிலையில், “1991-ம் ஆண்டு சட்டம், மத ஒற்றுமை மற்றும் நல்லி ணக்கத்தை பாதுகாப்பதற்காக இயற்றப்பட்டது. மதக்கலவரங்க ளால் நாடு, போதும்.. போதும்.. என்ற அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறிக்கையில் இந்தியாவின் சமூக கட்டமைப்பை நாம் சீர் குலைக்க கூடாது; பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் எம்.பி.க்கள் பேசுவதை அனுமதிக்கக் கூடாது. அதிலும் இதனை நாடா ளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் அனுமதிப்பதை ஏற்க முடியாது” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் கே ஜா நாடாளு மன்றத்தில் கண்டனம் தெரிவித் துள்ளார்.