“வெளிநாட்டினர் என்று கூறி தாக்குதல் ; நாங்கள் இந்தியர்கள் இல்லையா?
இடதுசாரி குழுவினரிடம் கன்னியாஸ்திரிகள் கண்ணீர்
பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநி லம் துர்க் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கன்னி யாஸ்திரிகளை சந்தித்த இடதுசாரி குழுவினரிடம் “நாங்கள் இந்தியர்கள் இல்லையா” என்று விம்மி அழுது கொண்டு கேட்டுள்ளனர். இதுதொடர் பாக அவர்கள் மேலும் கூறுகை யில்,”வெளிநாட்டினர் என்று கூறி எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எங்கள் நாட்டிற்கு வந்து எங்கள் உண வை சாப்பிட்டுவிட்டு தேச விரோத செயல்களைச் செய்யப் போகிறீர்களா? என பஜ்ரங் தளம் உறுப்பினர்கள் எங்களி டம் கேட்டார்கள். இதேபோல்,”கைது செய்யப்பட்டு நீதி கிடைக்காத பிற கைதிகளும் சிறையில் உள்ளனர்” என்று சகோதரிகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகியோர் இடதுசாரி குழு தலைவர்களிடம் தெரிவித்தனர். மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறப் படும் சிறுமிகளின் உறவினரான சிறையில் இருக்கும் இளைஞர், பஜ்ரங் தள ஆர்வ லர்களால் கொடூரமாக தாக்கியதாக தெரிவித்தார். இதுதொடர்பாக இளை ஞர் மேலும் கூறுகையில்,“காவல் துறையினர் முன்பு பஜ்ரங் தள உறுப்பினர் கள் ஆவணங்களைச் சரிபார்த்தனர். கன்னியாஸ்திரிகள் தாங்கள் மதம் மாற்றியதாக ஒப்புக்கொள்ளும்படி தொடர்ந்து கன்னியாஸ்திரிகளை மிரட்டி னர்” என அவர் தெரிவித்தார். அடிப்படை வசதி வேண்டும் சிறையில் தொடர்ந்து சித்ர வதையை எதிர்கொள்ளும் இளைஞரை வேறு அறைக்கு மாற்றுமாறு சிறை கண்காணிப்பாளரிடம் இடதுசாரி தூதுக்குழு கேட்டுக் கொண்டது. அதே போல மூட்டுவலியால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகளுக்கு உடனடியாக மருந்து மற்றும் படுக்கைகள் வழங்கப் பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். கன்னியாஸ்திரிகளைத் தாக்கியவர் கள் மீது விரைவில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத் வலியுறுத்தினார். சத்தீஸ்கர் அரசு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை தூக்கி எறிந்துவிட்டது என்று சிபிஎம் மக்களவை உறுப்பினர் கே.ராதாகிருஷ்ணன் கூறி னார். ஆரம்பத்தில் மதமாற்ற வழக்காக பதிவு செய்யப்பட்டது. பின்னர் சிறுமி கள் கிறிஸ்தவர்கள் என்று கண்டறி யப்பட்டபோது மனித கடத்தலாக வழக்கு மாற்றப்பட்டது என்று சிபிஐ மூத்த தலைவர் ஆனி ராஜா குற்றம் சாட்டினார்.