ஏப்ரல் 23 - உலக புத்தக தினம் வாசிப்பிற்கான புதிய வாசல் திறக்கட்டும்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து
சென்னை, ஏப். 22 - உலக புத்தகத் தினத்தையொட்டி, “ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவ சமூகம் காண, புத்தகங்கள் எனும் அறிவா யுதத்தை நமது கரங்களில் ஏந்து வோம்!” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இதுதொடர்பாக வெளி யிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு: “ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. வர லாற்றை அறிந்து கொள்வதற்கும், சமூக வாழ்வியல் குறித்து கற்றுக் கொள்வதற்கும் சிறந்த புத்தகங்களே எப்போதும் உதவி செய்கின்றன. அறி வை விரிவு செய்வதற்கும், விசாலப் பார்வையால் உலகை காண்பதற்கும் புத்தக வாசிப்பை பரவலாக்குவோம். ஒவ்வொருவர் கைகளிலும் இருக்கும் திறன் பேசியை போல, ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையில் உள்ள தொலைக்காட்சியை போல வீடுகள் தோறும் நூலகம் அமைப்போம். வாசிப் பிற்கான புதிய வாசல் திறக்கட்டும். வாசிப்பை இயக்கமாக்குவோம். ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவ சமூ கம் காண புத்தகங்கள் எனும் அறிவா யுதத்தை நமது கரங்களில் ஏந்துவோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சி ஸ்ட்) சார்பில் அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துக்கள்.”இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.