tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

நள்ளிரவில் தேர்தல் ஆணையர் நியமனம் அவமரியாதைக்குரியது

“உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசா ரணையில் உள்ள நிலையில், பிரதமரும், உள்துறை அமைச் சரும் நள்ளிரவில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்தது அவமரியாதைக்குரியது” என மக்க ளவை  எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகையில், “பிரதமர் மோடி தலைமையில் நடை பெற்ற தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும் கூட்டத்தில் எனது எதிர்ப்பைப் பதிவு செய்தேன். தேர்தல் ஆணை யத்தின் அடிப்படை அம்சமே, எந்த தலையீடும் இல்லாமல் சுதந்திரமான முறையில் தலைமை தேர்தல் ஆணை யர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறி னேன். மேலும் உச்சநீதிமன்றத்தில் 48 மணி நேரத்தில் தேர்தல் ஆணையர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலை யில் அவசர அவசரமாக தேர்தல் ஆணை யரை நியமித்தது ஏன்? உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிய தன் மூலமாக நாட்டின் கோடிக்கணக் கான வாக்காளர்களின் தேர்தல் ஆணை யம் குறித்த நேர்மை கேள்விக் குறியாகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசார ணையில் உள்ளது. இருப்பினும் பிரதம ரும், உள்துறை அமைச்சரும் நள்ளிரவில்  புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய முடிவெடுத்தது அவமரியா தைக்குரியது ; மரியாதை அற்றது என்று கூறியுள்ளார்.

உ.பி., சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம்

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் ஆனந்திபென் படேலின் உரையுடன் செவ்வாய்க்கிழமையன்று தொடங்கியது. ஆளுநர் உரையை தொ டங்கியதும் எதிர்க்கட்சிகளான சமாஜ் வாதி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், “கும்பமேளா விபத்துக்கு உத்தரப்பிர தேச பாஜக அரசின் நிர்வாகத் தோல்வி யே காரணம்” எனக் கூறி கிளர்ச்சியில் ஈடு பட்டனர். மேலும் “கோ பேக் கவர்னர் (Go Back governor)” என ஆளுநருக்கு  எதி ராக சமாஜ்வாதி, காங்கிரஸ் எம்எல்ஏக் கள் முழக்கங்களை எழுப்பி, சபாநாயகர் இருக்கைக்கு அருகே போராட்டம் நடத்தினர். இதனால் உத்தரப்பிரதேச சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.