tamilnadu

ஜனநாயகத்தின் நிலைமை கவலையளிக்கிறது

வாஷிங்டன், டிச.4- அமெரிக்காவின் ஜனநாயகம் கவலை யளிக்கும் நிலையில் உள்ளதாக பெரும்பாலான அமெரிக்க இளைஞர்கள் கருதுகிறார்கள் என்று ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. ஜனநாயகம் பற்றிப் பேசுவதற்காக பல் வேறு நாடுகளை அழைத்து அமெரிக்க ஜனா திபதி ஜோ பைடன் கூட்டம் நடத்துகிறார். இதன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. சீனாவுக்கு எதிராக அணிதிரட்டும் வேலை யாகவே இது இருப்பதாகப் பலர் கருது கிறார்கள். வர்த்தக ரீதியாகச் சீனாவை எதிர் கொள்ள முடியாமல்தான் அமெரிக்கா இத்த கைய அணி திரட்டலை செய்து வருகிறது.

இந்நிலையில்தான் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் கென்னடி அரசியல் பள்ளி சார்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. அமெ ரிக்காவில் ஜனநாயகத்தில் நிலை என்ன என்று 18 முதல் 29 வயதான அமெரிக்க இளை ஞர்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கி றது. அதற்கு விடை அளிக்கையில், “சிக்க லில் இருக்கிறது” மற்றும் “தோற்றுக் கொண்டி ருக்கிறது” என்று 52 சதவிகித அமெரிக்க இளைஞர்கள் கருத்து சொல்லியிருக்கிறார் கள். அமெரிக்காவில் ஜனநாயகம் “ஆரோக்கி யமாக” இருக்கிறது என்று வெறும் 7 சதவிகித இளைஞர்கள் மட்டுமே உணர்கிறார்கள்.

உலகிலேயே அமெரிக்காதான் தலை சிறந்த நாடு என்பதை மூன்றில் இரண்டு பங் கிற்கும் மேலான அமெரிக்க இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களில் பலர் அமெரிக்காவை விட சிறந்த நாடுகள் உலகில் உள்ளன என்று கருத்து தெரிவித்துள்ளனர். உள்நாட்டிற்குள் கருத்து வேறுபாடுகள் அதி கரித்து வருவதால், ஐக்கிய நாடுகள் என்ற கருத்திற்கு எதிரான மனநிலை உருவாகி வரு வதாகவும் கூறியிருக்கிறார்கள். தங்கள் வாழ் நாளில் ஏதாவது ஒரு மாகாணமாவது அமெ ரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்து பிரிந்து போய் விடலாம் என்றும் அவர்கள் அச்சம் தெரி வித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது இளைஞர்கள் மத்தியில் ஜோ பைடனுக்கு பெரும் ஆதரவு இருந்தது. தற்போது அந்த ஆதரவு 46 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சி மற் றும் குடியரசுக்கட்சி ஆகிய இரண்டுமே தங் கள் வேலைகளைச் சரியாகச் செய்யவில்லை என்று அமெரிக்க இளைஞர்கள் கருது கிறார்கள்.

எது வெற்றி?

ஒரு ஜனாதிபதி வெற்றிகரமானவராக இருக்கிறார் என்பதை எதை வைத்து அள விடுகிறீர்கள் என்ற கேள்விக்கு, பொருளாதா ரத்தை பலப்படுத்துவது, நாட்டை ஒற்றுமைப் படுத்துவது மற்றும் மருத்துவ நலம் மேம்பாடு ஆகிய மூன்றிலும் அவர்கள் எப்படி செயல் பட்டிருக்கிறார்கள் என்பதை வைத்து அளவிட லாம் என்று பெரும்பாலான இளைஞர்கள் கூறி யிருக்கிறார்கள்.