திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., சத்ருகன் சின்கா
நம் நாட்டின் விளம்பர அமைச்சர் யார் என்று தெரியுமா? அவர் தான் நமது நாட்டின் பிரதமர். மோடி ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த வேலையில் 10 முதல் 12 மணி நேரம் பிரசங்கம் செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சமாஜ்வாதி எம்.பி., அவதேஷ் பிரசாத்
அயோத்தி கால்வாயில் 22 வயது தலித் பெண் நிர்வாணத்துடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த தலித் பெண்ணிற்கு நீதி கிடைக்காவிட்டால் என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன். இது பாஜக அரசுக்கு எச்சரிக்கை.
ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்
தேர்தல் ஆணையம் பாஜகவிடம் சரணடைந்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமார் இந்த மாதம் இறுதியில் ஓய்வு பெறுகிறார். ஓய்வுக்குப் பின்பு அவருக்கு என்ன மாதிரியான பதவிகள் வழங்கப்படும்? ஆளுநர் பதவியா? குடியரசுத் தலைவர் பதவியா? ராஜீவ் குமார் அவர்களே! பதவிக்கான பேராசையை விட்டுவிடுங்கள்
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி
கும்பமேளாவில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற உண்மை தகவலை ஒன்றிய பாஜக அரசு இதுவரை தெரிவிக்காதது ஏன்? இது மனிதத் தன்மையற்றது. கும்பமேளா விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கூட அனுமதி மறுக்கப்படுகிறது.