சென்னை, ஜூலை 23 மத வழிபாட்டை தடுப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி ஆட்சியரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி, புதுச்சேரி மாநில செயலாளர் வழக் கறிஞர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள், கொளஞ்சியப்பன், குப்பு சாமி, செங்குலத்தான் ஆகியோர் புது ச்சேரி ஆட்சியர் வல்லவன் சந்தித்து புகார் கடிதம் வழங்கினார்கள். கடிதத் தில் கூறியிருப்பதாவது:- தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் தீண்டாமை வடிவம் குறித்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதற் கான முழு அறிக்கை தயார் செய்யப் பட்டு வருகிறது. கடந்த வாரம் புதுச்சேரி வில்லியனூர் உறுவை யாறு பகுதியில் நடைபெற்ற ஆய்வில் அங்குள்ள மாரியம்மன் கோவில் மற்றும் திரவுபதி அம்மன் கோவிலில் தலித் மற்றும் பழங்குடியின மக்களை கோவிலுக்கு உள்ளே சென்று வழிபடவும், தீமிதி திரு விழாவில் பங்கேற்கவும், அதே போல் தேரில் வீதி உலா வரும் பொழுது சாமிக்கு தீபா ஆராதணை காட்டவும் அனு மதியில்லை என்ற ஊர் மக்கள் கூறுகிறார்கள். 1998 ஆம் ஆண்டு தீமிதி நிகழ்விற்கு பிறகு தலித் தகுதி மக்கள் தீ மிதிக்க சென்ற போது போது அவர்கள் அங்கே தாக்க ப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை ஒரு தீர்ப்பில் கோவில் வழிபாட்டில் தலித் மக்கள் தடுக்கப்பட்டாலோ, ஒடுக்கப்பட் டாலோ அக்குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் இது சம்பந்தமாக பல்வேறு கிராமங்களில் ஆய்வு மேற் கொள்ளும் பொழுது, இதே பிரச்சினை ஆங்காங்கே தொடர் கிறது. எனவே தற்போது ஆடி மாதம் என்பதால் புதுச்சேரி முழுவதும் உள்ள கிராமங்களிலும் மற்றும் பிற சில நகரப் பகுதிகளிலும் இது போன்ற பிரச்சனைகள் எழும் இடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீடு செய்து தலித் மக்கள் ஆலய வழிபாட்டை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆட்சியர் உறுதி உருவையாறு ஆலய வழிபாட்டு பிரச்சனை குறித்து வில்லியனூர் துணை ஆட்சியரையும், காவல்துறை கண்காணிப்பாளரை அழைத்து இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என்று ஆட்சியர் வல்லவன் தீண்டாமை ஒழிப்பு முன் னணி தலைவர்களிடம் உறுதியளித் தார்.