தேர்தல் பத்திர முறைகேட்டில் ஈடுபட்ட கட்சிகள் மீது நடவடிக்கை அவசியம்!
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலை மையில், சென்னை தலைமைச் செயலகத் தில், திங்களன்று (மார்ச் 24) அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார் ஆகியோர் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் வருமாறு:
தொகுதி மறுவரையறை சமச்சீர் முறை வேண்டும்
1. நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீர மைப்பு விஷயத்தில், எக்காரணம் கொண்டும் மாநிலங்களுக்கு பாரபட்சமான முறையில் தொகுதிகளை குறைக்கக் கூடாது என்பதை கணக்கில் கொண்டும், விஞ்ஞானப் பூர்வமான முறையில் பொதுவிவாதத்தின் அடிப்படை யில் முடிவுகளை மேற்கொள்ள தேவை இருப்பதால் இந்த தள்ளி வைக்கும் முடிவை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்துவதாக இருந்தால், அனைத்து மாநிலங்களுக்கும் சமச்சீரான விகிதத்தில் உயர்வு வழங்கப்பட வேண்டும்.
ஒருதலைப்பட்சமான தேர்தல் ஆணையர் நியமனம்
2. இந்திய தலைமைத் தேர்தல் ஆணை யர் நியமனம் குறித்து அரசாணை மூலம் பிரதம அமைச்சர், ஒன்றிய உள்துறை அமைச்சர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகிய மூவர் கொண்ட குழு நியமிப்பது ஒருதலைபட்ச மானது, ஆட்சியாளர்களுக்கு சாதகமானது. எனவே, முந்தைய நிலையில் அதாவது, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ஆகிய மூவர் கொண்ட குழு இந்த நியமனத்தைச் செய்ய வேண்டு மென வலியுறுத்துகிறோம். 3. தேர்தல் பத்திர முறைகேட்டில் ஈடுபட்ட அரசியல் கட்சிகள் மீது சட்டப்பூர்வ நடவ டிக்கைகள் எடுப்பதற்கு ஆணையம் தேவை யான விசாரணையும், முன்முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். 4. சமீபத்தில் நடந்து முடிந்துள்ள தேர்தல் களில் நடைபெற்ற முறைகேடுகள், வழக்கு கள் சம்பந்தமான விபரங்கள் எழுத்துப்பூர்வ மான ஆவணங்கள், E-Documents ஆகியவற்றை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கு வதில்லை என்று தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவை ரத்து செய்ய வேண்டும். வெளிப்படையான முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு நம்பகத்தை நிரூபிக்க வேண்டும்
5. மின்னணு வாக்குப் பதிவு இயந்தி ரங்களின் உண்மைத் தன்மை மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக பல்வேறு சந்தேகங் களும், கேள்விகளும் பொதுவெளியில் எழுப்பப் பட்டு வருகின்றன. இருந்தபோதும் அவற்றை எந்தவித முறையிலும் ஒரு கட்சிக்கோ, தனி நபர்களுக்கோ சாதகமாக முறைகேடான முறையில் திருத்துவதற்கு வழி ஏற்படாமல் சரிசெய்ய ஒரு வெளிப்படையான சோதனை முறையும், மேற்பார்வையிடும் ஏற்பாடும் உட னடியாக செய்யப்பட வேண்டும். அது போலவே, வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை முதலில் வைத்து வாக்களித்த பின் அதனையடுத்து ஒப்புகைச் சீட்டு கடைசியாக வரிசையில் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஏற்கனவே எழுப்பியிருந்தோம். அதை நிறை வேற்ற வேண்டும்.
விதிகளை மீறும் ஆட்சியாளர் மீது நடவடிக்கை
தேவை 6. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் - வழிகாட்டும் நெறிமுறைகளுக்கும் முரணாக செயல்படக் கூடிய ஆட்சியாளர்கள் மீது உறுதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதில் தலைமை தேர்தல் ஆணையம் சமீப காலத்தில் தவறி யுள்ளது. இது சரிசெய்யப்பட வேண்டும். 7. வாக்காளர் அடையாள அட்டை வழங்கப் படாமலும், சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் பெயர் இருந்து அடையாள அட்டைகள் வழங்கப்பட்டும் உள்ள தாக பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. அளிக்கப்பட்ட அத்தனை புகார்களையும் உடனுக்குடன் சரிசெய்யப்பட வேண்டும். எனவே, வாக்காளர் பட்டியல் 100 சதவிகி தம் ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற முறை யில், யாரும் விடுபட்டு விடாமல் தயாரிக்கப்படு வதை ஆணையம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.
பண விநியோகத்தைத் தடுத்தாக வேண்டும்
8. வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்துவதற்கு உரிய விழிப்பு ணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 9. வாக்காளர்களுக்கு பணம் விநியோ கிப்பதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடு மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 10. தேர்தல் செலவினங்கள் குறித்து தொகுதி மட்டத்தில் உள்ள மேற்பார்வையா ளர்கள் மிகவும் எதார்த்தத்திற்கு புறம்பான கணக்கீடுகளைச் சொல்லி வேட்பாளரின் தலைமை முகவர்களை மிகவும் கஷ்டத் திற்கு உள்ளாக்குகின்றனர். எனவே, செல வினங்கள் குறித்த விஞ்ஞானப் பூர்வ தக வல்கள் அடிப்படையில் பட்டியலை தயா ரித்து தேர்தலுக்கு முன்பாக அவ்வப்போது வெளியிடப்பட வேண்டும்.
6 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் கூட்டப்பட வேண்டும்
11. இதுபோன்ற கூட்டங்கள் தேர்தல் சமயத்தில் மட்டும் நடத்துவதை விடுத்து ஆறு மாதத்திற்கு ஒருமுறை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் அழைத்து மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விவாதிக்க வேண்டும். 12. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் ஒரு சில வாக்குச்சாவடி மையங்கள் அதிக தொலைவில் இருப்பதால் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குச்சாவடி மையங்கள் 2 கி.மீ. தூரத்திற் குள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அளித்துள்ள முன்மொழிவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.