மகாராஷ்டிராவின் கொங்கணி பகுதி யில் உள்ள கடற்கரை நகரமான மால்வானில் முகலாயர்களுக்கு எதிராக கொரில்லா போர் திறமையை பயன்படுத்திய மராத்திய வீரரான சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை பலத்த காற்றில் உடைந்து விழுந்தது. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் அரசியல் நோக்கத்துடன் பிரதமர் மோடியால் அவசர அவசரமாக இந்த சிலை திறந்து வைக்கப் பட்டது. தேர்தலுக்கு முன் இது போன்ற பணி களை செய்ய மோடி எப்போதும் தயாராக இருக் கிறார். ஆறு மாதம் கழித்து ஏற்பட்ட இயற்கை யின் மாறுபாடுகளுக்கு அவர் பொறுப்பல்ல என்றாலும் அவர் சிலை உடைந்து விழுந்ததற் காக மன்னிப்புக் கேட்டார். மராட்டிய கடற்படைக்கு தலைமை தாங்கிய மராட்டிய அட்மிரல் கன்போஜி நினைவாக கடற் படையிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த சிலை யின் கட்டுமானத்திற்காக சுமார் ரூ.83 கோடி செலவிடப்பட்டது. ஆறடியில் சிலை செய்வது தான் உண்மையான திட்டம். அதற்கான வடி வமைப்பு, பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையின் படி,கலை இயக்குநரகத்தால் ஆய்வு செய்து அங்கீகரிக்கப்பட்டது.பின்னர் அதன் உயரத்தை அதிகரித்தது யார்? ஏன்? என்ற கேள்விகள் எழு கின்றன. சிலைக்கு சொந்தம் கோருபவர்கள் இன்று தன்னை வெளியே காண்பித்துக் கொள்ள அஞ்சுகிறார்கள்.
ஊழல் முறைகேடுகள்!
திறமையின்மை மற்றும் பகிரங்க ஊழல் இதற்குப் பின்னால் உள்ளது. மகாராஷ்டிர பாஜக கூட்டணித் தலைவர்கள் ஏகநாத் ஷிண்டே (சிவசேனாவின் ஒரு பிரிவை வழிநடத்தும் மகாராஷ்டிர முதல்வர்) மற்றும் இரண்டு துணை முதல்வர்களில் ஒருவரான பாஜக தலைவர் பட்னாவிஸ் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. என்சிபி தலைவர் அஜித் பவார். தனது சித்தப்பா சரத் பவாரை தனிப்பட்ட காரணங்களுக்காக கைவிட்ட மற்றொரு துணை முதல்வர். சிலை உடைக்கப்பட்டதற்கு எதிராக மராத்திய மக்களின் கடும் கோபத்தை உணர்ந்ததால் தன்னுடைய பங்காளியான பாஜகவிலிருந்து விலகி நிற்கிறார்.
“சிலை “அரசியல்!
சிலையின் கட்டுமானத்திற்கு ஒரு சிறந்த திறமையின் நிபுணத்துவம் தேவை என்பது முட்டாள்களுக்கும் புரியும். நேர்மையான மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நோக்கத்திற்காக அதிகாரிகளை கொண்ட உயர் ஆணையத்தின் மேற்பார்வையும் இதற்கு தேவைப்படுகிறது. அந்த தகுதியுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் இன்னும் பலர் இருக்கிறார்கள் . தேர்தல் நெருங்குகிறது என்ற அழுத்தமும் இன்னும் பல அழுத்தங்களும் தவிர்க்கப்பட்டு இருக்க வேண்டும். பிரதமர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அவசரம் அவசரமாக திறந்து வைத்தார்.மிக விரைவில் அது கசிவுகள் ஏற்பட்டு குறைபாடுகளை உருவாக்கியது. சிவாஜி சிலை விழுந்ததற்கு மன்னிப்புக் கேட்டது போல், மோடி அந்த படுதோல்விக்கு மன்னிப்புக் கேட்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
‘மெகா திட்டங்களின்’ பின்னணி!
எனது மும்பை நகரத்தில் ஒரு மெகா திட்டம்- கார்களின் பெருக்கத்தால் ஏற்பட்ட கடும் நெரிசலை குறைக்க பல ஏக்கர் கணக்கில் நிலங்களை கடலிலிருந்து மீட்டெடுத்து கடற்கரை சாலை திட்டத்தை உருவாக்குகின்றனர்.இலக்கு கள் நிர்ணயம் செய்யப்படுவதால் முக்கிய தலை வர்கள் திட்டத்தின் சிறிய பகுதிகளை கூட திறந்து வைக்க ஆர்வமாக உள்ளனர். இரவும் பகலும் இடைவிடாமல் வேலை நடந்து வருகிறது. அவசரம், வீண் விரயத்திற்கு வழி வகுக்கும் என குடிமக்கள் அச்சம் கொள்கின்றனர். ஆனால் அதிகாரிகளுக்கு எவ்வித கவலையும் இல்லை. ஒரு சுரங்கப்பாதையும் மும்பை கடற்கரை சாலையின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் மிக விரைவில் கசிவுகள் ஏற்பட்டன. ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்ட போது பல மூத்த குடிமக்கள் அந்த சுரங்கப் பாதையை தவிர்க்க முடிவு செய்தனர். கசிவுகள் சரி செய்யப்பட்டுள் ளது. ஆறுதல் தான். தங்களுடைய பெயர் கல்லில் பொறிக்கப்பட வேண்டும் என விரும்பும் தலைவர்கள் இருக்கும் நம் நாட்டில் அவசரம் அவசரமாக தரம் தாழ்ந்த நிலையில் மெகா திட்டங்கள் முடிக்கப்படும் அவலத்தை நாம் ஏன் இன்னும் சகித்துக் கொள்கிறோம்?
மோடி பரிசுத்தவாதியா?
பீகாரில் அதன் மழைப் பருவத்தில் பொழியும் முதல் மழையிலேயே புதிதாக கட்டப்பட்ட 12 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. குஜராத்தின் ராஜ் காட்டில் பாலம் இடிந்து விழுந்ததில் காரில் சென்ற பயணிகள் உயிரிழந்தனரே! நம் பொறி யாளர்கள், ஒப்பந்ததாரர்கள் திறமையற்றவர் களா அல்லது ஊழல் தில்லுமுல்லுகளோடு உற வாடுபவர்களா? யாரும் இதற்கு பொறுப்பேற்க வில்லை, தண்டிக்கப்படவில்லை. ஆனால் பிர தமர் மோடி தான் பரிசுத்தவாதி என சான்றளித்துக் கொள்கிறார். அவருடைய அதிகாரிகளும் அவரை பின்பற்ற வேண்டும் என சரடு விடுகிறார். அவருடைய உத்தரவாதம் பெண்களை வல்லுறவு செய்யும் குற்றவாளிகளுக்கு கருணை காட்ட மாட்டோம் என்ற வாக்குறுதியை போன்றது தான். இரட்டை இன்ஜின் ஆட்சியை அமர்த்துங் கள் என வாக்காளர்களை கவர்ந்திருக்கும் கவர்ச்சி கரமான ஆனால் வெற்று வாக்குறுதியைப் போன்றது தான்.
நன்றி : தி ட்ரிபியூன், 6 / 9 / 24
தமிழில்: கடலூர் சுகுமாரன்