வலைகளில் சிக்கிய 5 கடற்பசுக்கள்,
19 கடல் ஆமைகள் விடுவிப்பு
கடற்பசுப் பாதுகாப்பகம் அறிவிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விழிப் புணர்வு நடவடிக்கைகளின் விளைவாக புதுக்கோட்டை கடற்பகுதிகளில் மீன வர்களின் வலைகளில் சிக்கிய 5 கடற்பசுக்களும், 19 கடல் ஆமைகளும் மீண்டும் கடலுக்குள்ளேயே விடு விக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் சோ. கணேசலிங்கம் தெரிவித் தார். தமிழ்நாடு பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் கால நிலை மாற்ற எதிர்வுணர்வு பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட் டம் மணமேல்குடியில் சனிக் கிழமை நடைபெற்ற கடற்பசு பாதுகாப்பு குறித்த அனைத் துத் துறை அலுவலர்களு டனான ஒருங்கிணைப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டத் தில் அவர் பேசியதாவது: கடந்த 2022 ஆம் ஆண்டு கடற்பசுப் பாதுகாப்பகம் தமிழ்நாடு அரசால் அறி விக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டி னத்தில் இருந்து, புதுக் கோட்டை மாவட்டம் அம்மா பட்டினம் வரையில் இந்தப் பாதுகாப்பகத்தின் எல்லை வரையறுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 42.8 கிமீ நீள முள்ள கடற்கரைப் பகுதி யிலுள்ள மீனவ கிராமங்களி லும், கல்வி நிலையங்களி லும் வனத்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் விளைவாக மீன்பிடிக்கச் செல்லும்போது மீனவர்களின் வலைகளில் சிக்கும் கடற்பசுக்களும், ஆமைகளும் பத்திரமாக கட லுக்குள்ளேயே விடு விக்கப்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 5 கடற்பசுக்களும், 19 கடல் ஆமைகளும் விடுவிக்கப் பட்டுள்ளன. மீனவர்களுக்கு அதற்கான பாராட்டுச் சான்றி தழ்களும், வலைகளில் ஏற்பட்ட சேதத்துக்கான தொகைகளும் வழங்கப் பட்டுள்ளன. கடற்பசு, ஆமைகள், கடற்புற்கள் உள்ளிட்ட பிற கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிலும் கவனமாக தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார். கூட்டத்துக்கு அறந் தாங்கி வனச்சரக அலுவலர் து.மணிவெங்கடேஷ் தலைமை வகித்தார். மீன் வளத் துறை ஆய்வாளர் ஜகு பர்சாதிக், மீமிசல் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய் வாளர் ராமராஜன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.