tamilnadu

img

47,286 ஏக்கர் தரிசு நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றதாக மாற்றம்

47,286 ஏக்கர் தரிசு நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றதாக மாற்றம்

சென்னை, மே 19- கடந்த 4 ஆண்டுகளில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 10,817 கிராம பஞ்சாயத்துகளில் மொத்தம் ரூ.786.86 கோடி செலவில் 47,286 ஏக்கர் தரிசு நிலங்கள் சாகு படிக்கு ஏற்றதாக மாற்றப்பட்டுள்ள தாக தமிழ்நாடு மாநில அரசு தெரிவித் துள்ளது.  இதுதொடர்பாக அரசு வெளி யிட்டுள்ள அறிக்கையில், 2021 முதல் 27 மாவட்டங்களில் ரூ.1,212 கோடி செலவில் 917 ஏரிகள் புனரமைக்கப் பட்டுள்ளன. மேலும் 24 மாவட்டங் களில் ரூ.519 கோடியில் 88 தடுப்பணை கள் கட்டப்பட்டுள்ளன என கூறப்படு கிறது. 2020-21 ஆம் ஆண்டில் 36.07 லட்சம் ஹெக்டேராக இருந்த மொத்த பாசனப் பரப்பளவு 2023-24 ஆம் ஆண்டில் 38.33 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ள தாக அரசு ஒரு அறிக்கையில் தெரிவித் துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்த உணவு தானிய உற்பத்தி 457.08 லட்சம் டன்னாக உள்ளது.  மேலும் சராசரியாக 5.66% விவசாய வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. 5,427 கி.மீ  நீள கால்வாய்கள் மற்றும் 8,540  சிறு பாசன குளங்கள் தூர்வாரப்பட்ட தாகவும், 2,382 புதிய குளங்கள் மற்றும் 2,474 ஆழ்துளை கிணறுகள் உரு வாக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், 62,820 விவசாயி களுக்கு ரூ.499 கோடியில் பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன. பால்  உற்பத்தி அதிகரித்துள்ளது, முட்டை  உற்பத்தியிலும் மாநிலம் சாதனை படைத்துள்ளது என்று அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன வர்களுக்கு உதவும் வகையில், ரூ.1,428 கோடி செலவில் 72 மீன்  இறங்குதளங்கள் நிறுவப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.