tamilnadu

சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் பலி!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் பலி!

படுகாயங்களுடன் 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

வகாசி, ஏப்.26- விருதுநகர் மாவட்டம், சிவகாசி  அருகே நெடுங்குளம் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த னர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். சிவகாசி அருகே உள்ளது நெடுங்  குளம். இங்கு, ஜெய்சங்கர் என்பவ ருக்கு சொந்தமான ‘ஸ்டாண்டர்டு’ பட்டாசு தொழிற்சாலை உள்ளது. நாக்  பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலை யில், 60-க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், பேன்சி ரக  பட்டாசுகளுக்கான வேதிப்பொருட் களை கலக்கும் அறையில் எதிர்பாராத  விதமாக உராய்வு ஏற்பட்டதில் கண்ணி மைக்கும் நேரத்தில் பயங்கர சத்தத்து டன் வெடி விபத்து ஏற்பட்டது

3 பேர் பலி

இந்த விபத்தில் பட்டாசுகள் தயா ரிக்கும் 16 அறைகள் சேதமடைந்தன. மேலும், சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த  கலைச்செல்வி (35), சொக்கம்பட்டி யைச் சேந்த மாரியம்மாள் (38), கூமா பட்டியைச் சேர்ந்த  திருவாய்மொழி (40) ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தனர். 

7 பேர் காயம்

மேலும், எம். புதுப்பட்டியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி(50), ரெங்க பாளையத்தைச் சேர்ந்த லட்சுமி (38),  கோபாலன்பட்டியைச் சேர்ந்த   ராம சுப்பு (43) ஆகியோர் படுகாயமடைந்த னர்.  காயமடைந்தவர்களை சக தொழி லாளர்கள் உதவியுடன் மீட்ட காவல்  துறையினர், சிவகாசி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  மேலும், இந்த விபத்தில் கோபாலன் பட்டியைச் சேர்ந்த முனியம்மாள் (48), கூமாப்பட்டியைச் சேர்ந்த பாத்தி முத்து (53), ராபீயாபீவி (48), கோமதி  (35) ஆகிய 4 பேர் லேசான காயம டைந்தனர். இந்த வெடிவிபத்து குறித்து எம். புதுப்பட்டி காவல் நிலையத்தினர் ஆலை  உரிமையாளர் ஜெய்சங்கர், போர்மேன் சுப்புராஜ், மேலாளர் ராஜேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

உரிமம் ரத்து

இந்நிலையில், வெடி விபத்து நடை பெற்ற பட்டாசு ஆலையை ஆய்வு செய்த சிவகாசி சார்- ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன், ஆலையின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தலா ரூ.4 லட்சம்  முதல்வர் நிவாரண உதவி

விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டா லின், உயிரிழந்தவர்களின் குடும்  பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம்  ரூபாயும், படுகாயம் அடைந்த வர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் ரூபா யும், லேசான காயம் அடைந்த வர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவா ரண நிதியிலிருந்து வழங்கி உத்தர விட்டுள்ளார். 7 பேருக்கு சிறப்பு  சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட் டுள்ளார்.