சிபிஎம் 24ஆவது அகில இந்திய மாநாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளுக்கு காலை சிற்றுண்டி உணவுக்காக ரூ. 1 லட்சத்தை ஆண்டிபட்டி - சக்கம்பட்டி ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பழனிச்சாமி, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதியிடம் வழங்கி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் மாதம் 2-6 ஆம் தேதி வரை நடைபெறு கிறது. தேனி மாவட்டத்தில் 103 பேர் கொண்ட வரவேற்பு குழு தேர்வு செய்யப்பட்டு தீவிர பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மாநாட்டு நிதி வசூல் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆண்டிபட்டி பேரூர் பகுதியில் திங்களன்று கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் வசூல் நடைபெற்றது. அப்போது சக்கம்பட்டி ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவரும், கட்சியின் முன்னணி உறுப்பினருமான எஸ்.பழனிச்சாமி-பி.முனீஸ்வரி குடும்பத்தினர் மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு ஒரு வேலை காலை சிற்றுண்டிக்கு ரூ. 1 லட்சத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதியிடம் வழங்கி னர். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் எஸ்.ராமர், மாவட்டக்குழு உறுப்பினர் மீனாட்சி சுந்தரம் மற்றும் பி.டி.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.