tamilnadu

img

தனியார்மயமாக்கலால் ஐந்தாண்டில் 1.08 லட்சம் பேர் வேலை இழப்பு

தனியார்மயமாக்கலால் ஐந்தாண்டில் 1.08 லட்சம் பேர் வேலை இழப்பு

ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அரசு அதிர்ச்சியளிக்கும் பதில்

புதுதில்லி, ஆக. 30 - மோடி அர சின் தனியார் மயமாக்கல் கொள்கையால் மத்திய பொதுத்  துறை நிறுவ னங்களில் கட ந்த ஐந்தாண் டில் 1.08 லட்சம் பேர் வேலை இழந்  துள்ள அதிர்ச்சித் தகவல் வெளிச்சத் திற்கு வந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திண்டுக்கல் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் எழுப்பிய கேள்வி எண்: 4354-க்கு பதி லளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதி காரமளித்தல் துறை இணையமைச் சர் பி.எல்.வர்மா, 2019-20 முதல் 2023- 24 வரையான கால கட்டத்தில் மத்திய  பொதுத்துறை நிறுவனங்களின் (சிபி எஸ்இ - CPSE) ஊழியர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

வேலை இழப்பின்  பயங்கர புள்ளிவிவரங்கள் பொதுத்துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு அறிக்கை யின்படி, தொடர்ச்சியான வேலை இழப்  பின் பயங்கர நிலை தெரிய வந்துள் ளது. 2019-20இல் மொத்தம் 9.20 லட்சம் பேர் பணிபுரிந்த நிலையில், 2020-21இல்  8.60 லட்சமாகவும், 2021-22இல் 8.39 லட்சமாகவும், 2022-23இல் சிறிது அதிகரித்து 8.41 லட்சமாகவும், 2023-24இல் மீண்டும் கடும் வீழ்ச்சியுடன் 8.12  லட்சமாகவும் குறைந்துள்ளது. இது மொத்தம் 1.08 லட்சம் வேலை வாய்ப்பு இழப்பை குறிக்கிறது, அதா வது 11.7 சதவிகித வேலை இழப்பு  நிகழ்ந்துள்ளது.

இந்த வேலை இழப்புக்கு பெரும்பாலும் பொதுத் துறை நிறுவனங்களின் விற்பனை, இணைப்பு மற்றும் மூடல் காரணமா கும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இரட்டை அடி பட்டியலினத்தவர் (எஸ்சி - SC): 2019-20இல் 1.60 லட்சம் பேர் (17.44 சதவிகி தம்) பணிபுரிந்த நிலையில், அது 2023-24 இல் 1.44 லட்சம் பேர்கள் (17.76 சதவிகி தம்) ஆக குறைந்துள்ளது. சதவிகிதம்  சிறிது அதிகரித்தாலும் உண்மையான எண்ணிக்கையில் 16,000 பேர் வேலை இழந்துள்ளனர். பழங்குடியினர் (எஸ்டி - ST) மிக  மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ள னர். 2019-20இல் 1.00 லட்சம் (10.84 சத விகிதம்) பேர் பணியாற்றிய நிலையில், 2023-24ல் 0.88 லட்சம் பேர்கள் (10.85 சத விகிதம்) ஆக, 12,000 வேலைகள் இழப்பு  நடந்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி - OBC): 2019-20இல் 1.99 லட்சம்  பேர்கள் (21.59 சதவிகிதம்) பணியாற்றிய  நிலையில், 2023-24இல் 2.13 லட்சம் பேர்கள் (26.24 சதவிகிதம்) ஆக எண் ணிக்கையில் அதிகரித்துள்ளது. மோடி அரசின் ஒரு தசாப்த தனியார்மயமாக்கல் வெறி 2014இல் ஆட்சிக்கு வந்த மோடி அரசு, முந்தைய அரசுகளை விட மிகத்தீவிரமாக தனியார்மயமாக்கலில் ஈடுபட்டுள்ளது. மன்மோகன் சிங் அரசு காலத்தில் (2004-2014) வெறும் 42 முறை மட்டுமே பொதுத்துறை பங்கு கள் விற்கப்பட்ட நிலையில், மோடி காலத்தில் (2014-2024) 179 முறை தனி யார்மயமாக்கல் நடந்துள்ளது - இது 326 சதவிகித அதிகரிப்பாகும்.

 1991 முதல் 2023-24 வரை மொத்தம் 350 முறை பொதுத்துறை பங்குகள் விற்கப்பட்டு ரூ. 5 லட்சத்து 82 ஆயி ரத்து 326 கோடியே 08 லட்சம் வருமானம்  ஈட்டப்பட்டுள்ளது என ஒரு புள்ளிவிவ ரம் தெரிவிக்கிறது. . மிகப்பெரிய அளவில்  தேசிய சொத்துகள் விற்பனை பொதுத்துறை நிறுவனமாக இருந்த ‘ஏர் இந்தியா’வை 2021இல் டாடா  குழுமத்திடம் வெறும் ரூ. 18,000 கோடிக்கு விற்றது. ஆனால், அதன் மொத்தக் கடனான ரூ. 91,116 கோடி யில் வெறும் ரூ. 15,300 கோடியை மட்டுமே டாடா ஏற்றுக்கொண்ட நிலை யில், மீதமுள்ள ரூ. 75,816 கோடி கடனை  இந்திய மக்களின் வரிப்பணத்திலி ருந்து தான் அரசு செலுத்தியது. இவ் வாறு அக்கிரமமான முறைகளில் தேசிய சொத்துகளை மோடி அரசு விற்றுச் சூறையாடியுள்ளது.

தோல்வியடையும் தனியார்மயமாக்கல் இலக்குகள் 2024-25 நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் விற்பனை மூலம்  ரூ. 1.80 லட்சம் கோடி முதல் ரூ. 2.00 லட்சம் கோடி வரை வருமான இலக்கு வைத்தி ருந்த மோடி அரசு, 2025 ஜனவரி வரை  வெறும் ரூ. 8,625 கோடியை மட்டுமே  திரட்ட முடிந்துள்ளது - இது இலக்கில் வெறும் 4.3 சதவிகிதம் மட்டுமே. இதிலும் தோல்வி தான். கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து தனது ‘தனியார்மயமாக்கல் இலக்குகளை’ தவறவிட்டு வருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. “வெறும் ஏழு பொதுத்துறை நிறு வனங்களில் இருந்து மட்டும் 3.84 லட்சம் வேலைகள் பறிக்கப் பட்டுள்ளன. ஒன்றிய அரசில் பெண்க ளின் வேலைவாய்ப்பு 42 சதவிகிதம் குறைந்துள்ளது. நிரந்தர வேலைக ளுக்கு பதிலாக ஒப்பந்த மற்றும் தற்காலிக அரசு வேலைகள் 88 சத வீதம் அதிகரித்துள்ளன” என்ற உண் மையும் மோடி அரசின் முகமூடி யைக் கிழிக்கிறது. சமூக நீதி அழிப்பு  பொதுத்துறை நிறுவனங்கள் வர லாற்று ரீதியாக பிற்படுத்தப்பட்ட பகுதி மக்களின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளன. தலித்து கள், ஆதிவாசிகள், இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உறுதிப் படுத்தியுள்ளன.

தனியார்மயமாக் கலால் இந்த சமூக நீதி கொள்கை அழிக்கப்படுகிறது. சச்சிதானந்தம் கடும் விமர்சனம் இவற்றையெல்லாம் குறிப்பிட்டு, திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் கடுமையாக விமர்சித்துள்ளார். “மோடி அரசின் தனியார்மயமாக்கல் கொள்கை, இந்த தேச மக்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அழிவு கரமான நடவடிக்கை. ஐந்து ஆண்டு களில் 1.08 லட்சம் வேலைகள் போனது கொடுமையானது. ஒதுக்கீட்டு சதவிகிதம் அதிகரித் தாலும், மொத்த வேலைவாய்ப்பே குறைவதால் ஒதுக்கீட்டு இட பிரிவினருக்கு கிடைக்கும் வேலை களும் குறைகின்றன. நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட பொ துத்துறை நிறுவனங்கள் நாட்டின் முதுகெலும்பு. இவற்றை விற்றுத் தனியாரிடம் ஒப்படைப்பது தேசத் துரோகம். வேலையில்லாத் திண் டாட்டம் அதிகரித்து வரும் நிலை யில், இந்த கொள்கை பேரழிவை ஏற்படுத்தும். பொதுத்துறையை வலுப்படுத்தி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கார்ப்பரேட் நலன் காக்கும் கொள் கையை கைவிட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.