‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் துவக்கம்!
சிதம்பரத்தில் மனுக்களைப் பெற்றார் முதல்வர்
சிதம்பரம், ஜூலை 15 - தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி மக்களிடமிருந்து மனுக்களைப் பெறும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் செவ் வாய்க்கிழமை (ஜூலை 15) தொடங்கி வைத்து, மக்களிடமிருந்து மனுக் களைப் பெற்றார். அவர்களிடம் பல்வேறு விவரங்களையும் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி. கணேசன், மக்களவை உறுப்பினர் கள் தொல். திருமாவளவன், து. ரவிக் குமார், எம்.கே.விஷ்ணு பிரசாத், சட்ட மன்ற உறுப்பினர்கள் கு. செல்வப் பெருந்தகை, ம. சிந்தனைச் செல்வன், தி. வேல்முருகன், சபா. ராஜேந்திரன், கோ. ஐயப்பன், ராதா கிருஷ்ணன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், முதல்வரின் முகவரித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர். “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத் தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் நகர்புறப் பகுதிகளில் 3,768 முகா ம்களும் ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் முகாம் நடைபெறும் பகுதிகளில் 2 நாள் களுக்கு முன்பாகவே தன்னார்வலர் கள் வீடு, வீடாகச் சென்று முகாம் குறித்த விவரங்களைத் தெரிவித்து அவர்களுக்கு தேவையான விண்ணப்பங்களை வழங்குவார்கள் என கூறப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளி ரும் இந்த முகாம்களில் விண்ணப்பங் களை அளிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால், மக்களி டையே இந்த திட்டத்துக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.