லக்னோ:
உணவு விற்பனையில் ஈடுபட்டதற் காக, தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை, இந்துத்துவா கும்பல் ஒன்று கொடூரமாகத் தாக்கியுள்ளது.பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத் தில் தலித்துக்கள் மற்றும் சிறுபான்மைஇஸ்லாமிய மக்கள் தாக்கப்படுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இந்துத்துவா கும்பலைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு இந்த வன்முறையை அரங்கேற்றிவருகின்றனர். அந்த வகையில், ‘நொய்டா’ பகுதியில், வாகனத்தில் வைத்து சாலையோரம் உணவு விற்பனையில் ஈடுபட்டுவந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த லோகேஷ்(43) என்பவர், இந்துத்துவக் கும்பலால்கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
“ஒரு தலித்தான நீ எவ்வாறு உணவுப் பொருளை விற்கலாம்? நீ தொட்டுவழங்கும் பிரியாணியை நாங்கள் சாப்பிடவா?” என்று கேட்டு அவர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். வாகனத்தில் இருந்த பிரியாணி பாத்திரத்தையும் கீழே தள்ளி கொட்டியுள்ளனர். நீண்டகாலமாகவே தலித் இளைஞர் லோகேஷை அவர்கள் துன்புறுத்திவந்ததாக கூறப்படுகிறது.இதனிடையே, லோகேஷ் தாக்கப் பட்டதை வீடியோ எடுத்த ஒருவர், அதனைசமூக வலைதளங்களில் பகிரவே, அதுஉத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற் படுத்தியது. குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய கட்டாயத்தையும் போலீசாருக்கு ஏற்படுத்தியது.இதையடுத்து, லோகேஷைத் தாக்கிய 5 பேர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், ரபுபுரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.