tamilnadu

img

ஊர்க்காவல் படையினர் 1 லட்சம் பேரின் வேலை பறிப்பு!

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 25 ஆயிரம் பேரின் வேலையைப் பறித்ததுடன், மேலும் 95 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்புவதற்கு, அம்மாநில பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.காவல் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து சிக்னல்களில் ஊர்க்காவல் படையினர்பணியாற்றி வந்தனர். அண்மையில் இவர் களின் ஊதியம், காவல்துறையினருக்கு இணையாக உயர்த்தப்பட்டதாகவும், அது பட்ஜெட்டில் எதிரொலித்ததாகவும் கூறப்படு கிறது. 
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஊர்க்காவல் படையில் ஆட்குறைப்பு செய்வதென்ற முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி சட்டம் - ஒழுங்குத் துறையில் ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கை 32 சதவிகிதம் குறைக்கப் படுவதுடன், 95 ஆயிரம் பேரை பணியிலிருந்தே விடுவிப்பதென்றும் தீர்மானிக்கப் பட்டுள்ளது. பணியில் இருப்பவர்களுக்கும், வேலை நாட்களை, 25-இல் இருந்து 15 நாட்களாக குறைக்க முடிவு செய்யபட்டுள்ளது.