tamilnadu

img

ரூ. 120 கோடி மதிப்புள்ள நிலம் 53 கோடிக்கு விற்பனை? சூறையாடப்படும் ரயில்வே சொத்துக்கள்

லக்னோ:
நரேந்திர மோடி அரசானது, உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுத லாளிகளுக்கு நாட்டைச் சூறையாடு வதாக சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் ராம்சங்கர் ராஜ்பர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறி யிருப்பதாவது: “அமெரிக்கத் தயாரிப்புகளுக் கான சுங்க வரியைக் குறைக்கச் செய்வதற்கும், அவர்களின் ஆயுதங்கள், பால் பொருட்கள், வேளாண்மற்றும் மருத்துவப் பொருட்களை விற்பனை செய்வதற்கே டிரம்ப் இந்தியா வந்துள்ளார். நாடு கடுமையான பொருளா தார மந்தநிலை, வேலையின்மை, பணவீக்கம் ஆகியவற்றைக் கடந்து வரும் நிலையில், இந்திய சந்தையை ஆக்கிரமிக்க விரும்பும் டிரம்பின் வரவேற்புக்காக அரசாங்கம் 100 கோடி ரூபாய் செலவழிக்கிறது. லக்னோவின் ஐஸ்பாக் நகரில் உள்ள ரூ. 120 கோடி மதிப்புள்ள ரயில்வே நிலம், ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தினருக்கு வெறும்53 கோடி ரூபாய்க்கு மட்டுமேவழங்கப்பட்டுள்ளது. புதுதில்லி யின் அசோக் விஹாரில் உள்ள 10.76 ஹெக்டேர் பரப்பளவிலான ரயில்வே நிலம் கோத்ரேஜ் குழுமத்திற்கு மலிவான விலையில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மோடி அரசு, அனைத்து வகையிலும், நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. சொத்துக்களை சூறையாடிக்கொண்டிருக்கிறது.இவ்வாறு ராஜ்பர் கூறியுள்ளார்.