tamilnadu

img

மோடி, அமித்ஷா மீது மோசடி வழக்கு பதிவு செய்த ராஞ்சி நீதிமன்றம்.. ரூ. 15 லட்சம் தருவதாக மக்களை ஏமாற்றி விட்டார்கள்

ராஞ்சி:
ஆட்சிக்கு வந்தால் இந்தியர்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக உறுதியளித்து ஏமாற்றிவிட்டதாக, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மீது மோசடிவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, ராஞ்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் எச்.கே. சிங் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதனை ஏற்றுக்கொண்ட ராஞ்சி உயர்நீதிமன்றம், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123 (பி) பிரிவுடன், இந் திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 415 (மோசடி) மற் றும் 420 (நேர்மையின்மை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

மேலும் இவ்வழக்கு மார்ச் 2-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என் றும் அறிவித்துள்ளது.முன்னதாக, 2013-14 ஆம் ஆண்டிலேயே வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், மனுதாரர் எச்.கே. சிங் முன்பே ஏன்வழக்கு தொடரவில்லை; இவ்வளவு காலதாமதம் ஏன்? என்றுநீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.அதற்கு, “2019 மக்களவைத் தேர்தலையொட்டி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என்று பாஜகவினர் வாக்குறுதி அளித்தனர். அந்த வாக்குறுதியை தற்போது சிஏஏ சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளனர். அதேபோல ரூ. 15 லட்சம் தருவோம்என்ற 2014-ஆம் ஆண்டின் வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை?” என்பதேஎனது கேள்வி என்றும், “இதன்மூலம் மோடியும் அமித்ஷாவும் மக்களை ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்கள்” என்றும்எச்.கே. சிங் பதிலளித்துள்ளார்.