ஜபல்பூர்:
மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஜபல்பூர் பகுதியில் அமித்சுக்லா என்ற வாடிக்கையாளர், தனக்கு வேண்டிய உணவை, ‘சொமேட்டோ’ நிறுவனத்திடம் ஆர்டர் செய்துள்ளார். அந்த நிறுவனமும் குறித்த நேரத்தில் தனது ஊழியர் மூலம் உணவை டெலிவரி செய்துள்ளது. ஆனால், அமித் சுக்லா திடீரென தனக்கு உணவு வேண்டாம் என்று திருப்பி அனுப்பியுள்ளார். அத்துடன் நில்லாமல், “சொமேட்டோ மூலம் ஆர்டர் செய்த உணவை சிறிது நேரத்துக்குமுன்னர் ரத்து செய்தேன். இந்து அல்லாத ஒருவர் மூலம் எனது உணவை அவர்கள் கொடுத்து அனுப்பினர். நான்அந்த ஊழியரை மாற்றுமாறு கூறியதற்கு முடியாது என்று கூறி விட்டனர்.
உணவை கேன்சல் செய்தால், பணத் தையும் திரும்பத்தர முடியாது என்று கூறினர்; நான் இந்து அல்லாதவர் கொண்டுவந்த உணவு, பணம் இரண்டையும் வேண்டாமென்று கூறிவிட்டேன்” என்றும் ட்விட்டரில் பெருமை அடித்துள்ளார். இது ட்விட்டரில் விவாதமாக மாறியுள்ளது.இந்நிலையில், அமித் சுக்லாவின் பிதற்றல் எல்லை மீறிப்போவதைப் பார்த்த ‘சொமேட்டோ இந்தியா நிறுவனம்’ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்பக்கத்தில் ‘உணவுக்கு மதமில்லை’ என்று கூறி அமித் சுக்லாவுக்கு பதிலடி
கொடுத்துள்ளது. “இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அம்சத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டவர்கள். எங்கள்வாடிக்கையாளர்களும் பலத்தரப்பட்டவர்கள்தான். எனவே எங்கள் நிறுவனத்தின் நெறிமுறைக்கு பங்கம் ஏற் படுத்தும் வணிகத்தை இழந்தாலும், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை”என்று ‘சொமேட்டோ’ நிறுவனர் தீபிந் தர் கோயலும் குறிப்பிட்டுள்ளார். ‘சொமேட்டோ’ நிறுவனத்தின் இந்த உறுதிப்பாடு சமூகவலைத்தளங்களில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.