லக்னோ:
உ.பி. மாநிலம் மீரட்டில், பாஜக தலைவர் ஒருவர் தனது மகனுடன் சேர்ந்து, மத்திய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழக (என்.சி.இ.ஆர்.டி) பாடநூல்களை சட்ட விரோதமாக அச்சிட்டு பல கோடி ரூபாய்கொள்ளையடித்திருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டிலுள்ள கஜ்ரவுலா பகுதியில் என்சிஇஆர்டி பாடநூல்கள் அனுமதியின்றிசட்டவிரோதமாக அச்சடிக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து உத்தரப்பிரதேச சிறப்புப்படை போலீசார் (எஸ்டிஎப்)இரண்டு நாட்களுக்கு முன்பு, கஜ்ரவுலாவில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு ரூ. 25 கோடி மதிப்புள்ள நவீன அச்சு இயந்திரங்களில் என்சிஇஆர்டி பள்ளிப் பாடநூல்கள் அச்சடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள இயந்தி
ரங்கள் மற்றும் ரூ. 34 கோடி மதிப் புள்ள பாடநூல்கள் எஸ்டிஎப் படையினரால் கைப்பற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
மீரட்டின் அருகிலுள்ள அம் ரோஹா மாவட்ட சேமிப்புக் கிடங்கு ஒன்றிலும் அச்சிட்டு விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த பாடநூல்களும் 6 இயந்திரங்களும் கைப் பற்றப்பட்டன. போலீசார் வருவதை அறிந்ததும், அங்கிருந்தவர்கள், புத்தகங்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பினர்.விசாரணையில், பாஜக-வின் உ.பி. மாநிலம் மீரட் நகரத் தலைவர்களில் ஒருவரான சஞ்சீவ் குப்தா, அவரது மகன் சச்சின் குப்தா ஆகியோர் தான் சட்டவிரோதமாக புத்தகங்களை அச்சிட்டு வந்தது தெரியவந்தது.இதையடுத்து, சஞ்சீவ் குப்தா, சச்சின் குப்தா, விகாஸ் தியாகி, நபீஸ்,சுனில் குமார், சிவம், ராகுல், ஆகாஷ்உள்ளிட்ட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில்8 பேரை கைதும் செய்தனர். எனினும், சஞ்சீவ் குப்தா, சச்சின் குப்தாஆகியோர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
சோதனைக்குப் பிறகு, போலீஸ்அதிகாரிகள் சச்சினுடன் தொலைபேசியில் பேசினர். அப்போது அவர் புத்தகங்களை அச்சிட்டதற்கான ஆவணங்களுடன் வருவதாகக் கூறினார். ஆனால், சொன்னபடி வரவில்லை. அத்துடன் அவரது மொபைலையும் அணைத்து விட்டார் என்றுசிறப்புப்படை டி.எஸ்.பி. பிரஜேஷ் குமார் சிங் கூறியுள்ளார்.சச்சின் குப்தா, கடந்த 8 ஆண்டுகளாகவே இதுபோன்ற என்சிஇஆர்டி பாட நூல்களையும், உ.பி.மாநில கல்வி வாரியத்தின் பாடநூல்களையும் சட்டவிரோதமாக அச்சிட்டு வந்ததாக கூறப்படுகிறது.ஆனாலும், அந்த வழக்குகளில்தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை. மத்திய - மாநில அரசுகளிடம் உள்ள செல்வாக்கு காரணமாக,தொடர்ந்து அவர், பாட நூல்களை சட்டவிரோதமாக அச்சிட்டு பல நூறுகோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளார். என்சிஇஆர்டி-யால் அச்சடிக்கப் பட்ட நூல்கள் என்பதைக் குறிக்கும் வகையில், ‘வாட்டர்மார்க்’ என்றழைக்கப்படும் அச்சுக் குறியீடு நூலின்ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும்.அந்த குறியீடு உட்பட சச்சின் குப்தாவின் பாடநூலில் துல்லியமாக இடம்பெற்றுள்ளது. இந்த புத்தகங்கள் நாடு முழுவதும் விற்கப்பட்டு வந்துள்ளன. இதில் பல கோடி ரூபாய்ஜிஎஸ்டி மோசடி நடைபெற்றுள் ளதாகவும் குற்றச்சாட்டு எழுந் துள்ளது.பாஜக தலைவர் அடித்த கொள்ளை வெளியே தெரிந்துவிட்டதால், அவரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக பாஜக தலைமைஅறிவித்துள்ளது.