போபால்:
சானிட்டைசர் (Sanitizer) எனப்படும் கிருமி நாசினியை, கோயில்களில் அனுமதிக்க மாட்டோம் எனமத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அர்ச்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுமுடக்கத் தளர்வுகளின் ஒருபகுதியாக, ஜூன் 8 முதல் கோயில்களைத் திறக்க மோடி அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனினும்,தனிமனித விலகலை கடைப்பிடிக்கும் பொருட்டு வழிபாட்டு தலங்களுக்கு வருபவர்கள் 6 அடிஇடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தொற்றை தவிர்க்கும் பொருட்டு முகக்கவசம் கண்டிப் பாக அணிந்திருக்க வேண்டும். சானிடைசர்கள், சோப்புகள் இருப்பதை வழிபாட்டு தலங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.
இந்நிலையில், “மத்திய அரசு கூறியுள்ளபடி கோயில்களில் சானிட்டைசர்களை அனுமதிக்க முடியாது” என்று மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மா வைஷ்ணவதம் நவ் துர்கா கோயிலைச் சேர்ந்த அர்ச்சகர் சந்திரசேகர்திவாரி கூறியுள்ளார். ஏன் அனுமதிக்க முடியாது, என்ற கேள்விக்கு“அதில் ஆல்கஹால் உள்ளது” என்று கூறியுள்ளார்.கோயில்களுக்கு மது அருந்தி விட்டு செல்லாத நிலையில், ஆல்கஹால் இருக்கும் சானிட்டைசர் களை மட்டும் எவ்வாறு அனுமதிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுவகைகளில் பயன்படுத் தப்படும் ஆல்கஹாலுக்கும், சானிட்டைசர்களில் பயன்படுத் தப்படும் ஆல்கஹாலுக்கும் வேறுபாடுகள் உள்ளன என்பதை அவருக்கு யார் சொல்லிப் புரியவைப் பார்களோ தெரியவில்லை.