லக்னோ:
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதைஎதிர்த்து, இஸ்லாமிய அமைப்பினர் சீராய்வு மனுக்களை தாக் கல் செய்வர் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதுபோன்ற முடிவை, இதுவரை எந்தவொரு இஸ்லாமிய அமைப்பும் எடுக்கவில்லை.அதற்கான காரணத்தை சன்னி வக்பு வாரியத் தலைவர் ஜாபர் பரூக்கி என்டிடிவி-க்குஅளித்த பேட்டியில் வெளியிட் டுள்ளார்.“இரண்டு முக்கிய காரணங்களுக்காகவே, உச்சநீதிமன் றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து,மறுசீராய்வுக்குச் செல்லவில்லை” என்று அந்த பேட்டியில்கூறியுள்ள பரூக்கி, “முதலாவது,தீர்ப்பு எப்படி வந்தாலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தோம். இது ஒரு காரணம். இரண்டாவது,அயோத்தி விவகாரத்தை கடந்த சில ஆண்டுகளாக சமூகப்பிரிவினையை ஏற்படுத்தும் கருவியாக சில சக்திகள் பயன்படுத்தி வரும் நிலையில், இப்போது நாங்கள் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று கோரினால், அது அவர்களுக்கு சாதகமாகி விடும் என்பதாலும், சீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.அதேநேரம், “அயோத்தி வழக்கில் சன்னி வக்பு வாரியம்மட்டுமன்றி வேறுபல அமைப்புகளும் இருக்கும் நிலையில்,அவர்களும் எங்களைப் போலவே செயல்படுவார்கள் எனகூற முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.