tamilnadu

img

தயிர் பாக்கெட்டில் தமிழில் 'தயிர்' என எழுதக்கூடாதாம்!

தயிர் பாக்கெட்டில் "தஹி" என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய இந்தி பேசாத மாநிலங்களில் தயிர் பாக்கெட்டில் "தஹி" என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் மாநில மொழிகளான தயிர், மோசரு ஆகிய வார்த்தைகளை அடைப்புக் குறியில் வைத்துக்கொள்ளலாம் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.