tamilnadu

img

விலங்குகள் தொடர்புள்ள விளையாட்டுகள்

விலங்குகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளை தொலைக்காட்சியிலோ, நேரிலோ பார்ப்பது சாதாரணமாகத் தான் இருக்கும். ஆனால் அந்த விலங்குகளை வளர்த்து, பழக்கப்படுத்தி போட்டியில் களமிறக்குவது அவ்வளவு எளிதான காரியமில்லை.

சண்டே எக்ஸ்பிரஸ்

உலகில் மானிடர்கள் விளையாடும் விளை யாட்டுகளை விட விலங்குகளை வைத்து விளையாடும் விளையாட்டுகள் தான் அதிகம் பிரசித்தி பெற்றது. பண்டைய காலம் முதல் இன்றைய நவீனக் காலம் வரை பெரும்பாலான விளையாட்டுகள் விலங்கு களை வைத்துத் தான் விளையாடப்பட்டு வருகிறது.  யானைப்போர், ஒட்டகச்சவாரி, சேவற்போர், குதிரைப் பந்தயம், ஏறுதழுவல் (ஜல்லிக்கட்டு), புறா பந்தயம், மாட்டு வண்டி பந்தயம், எருமை பந்தயம் போன்ற விளை யாட்டுகள் விலங்குகளின் தொடர்புடைய விளையாட்டா கும். இதில் யானைப்போர் தவிர மற்ற விளையாட்டுகள் தற்போதும் விளையாடப்படுகிறது.  விலங்குகளை வைத்து விளையாடும் விளையாட்டு களை ரசிக்கும் பார்வையாளர்களுக்கு அது சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் விளையாட்டு விலங்கு களைப் பழக்குவது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. 6 அறிவுள்ள பள்ளி மாணவனைப் பாடம் கற்பிக்க ஆசிரி யர் படும் கஷ்டம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதே போல 5 அறிவுள்ள வாயில்லா ஜீவனைப் பழக்குவது எவ்வளவு பெரிய கஷ்டமான வேலை என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்...  அதனைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்... 

பந்தய விலங்குகள்... 

பந்தயத்தில் பங்கேற்கும் விலங்குகளான ஒட்டகம், குதிரை, மாடு, எருமை போன்றவைகளை அடித்தாலோ லத்தியை வைத்துக் குத்தினாலோ ஓடிவிடும். அதனால் இந்த வகை விளையாட்டு விலங்குகளுக்குப் பயிற்சி அளிப் பது சற்று எளிதான காரியம்.

புறா...

பந்தயங்களில் பயன்படுத்தப்படும் புறாவிற்கு பயிற்சி தேவையில்லை என்றாலும்,மனிதனுடன் நன்கு பழகிய புறாக்கள் மட்டுமே பந்தயத்தில் கள மிறக்கப்படும்.போட்டி நடைபெறும் இருப்பிடத்திலிருந்து 1000 கிமீ அப்பால் பந்தயத்தில் பங்கேற்கும் புறாக் களைக் கொண்டு விடுவார்கள். இருப்பிடத்திற்கு முதலில் வரும் புறா வெற்றியாளராகக் கருதப்படும்.எனினும் நன்கு பழக்கப்படுத்தப்பட்ட புறா மட்டுமே விடப்பட்ட இடத்திலி ருந்து போட்டி நடைபெறும் இடத்திற்கு திரும்பி வரும். 

சேவற்போர்...

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு அடுத்து முக்கிய விளை யாட்டான சேவற்போர் பொங்கல் சீசனில் வெகு விமர்சியாக கொண்டாடப்படும். சாவல்கட்டு என அழைக்கப்படும் இந்த விளையாட்டில் பங்கேற்கும் சேவலுக்கு நீச்சல் பயிற்சி அதிகம் தேவை. மற்ற பயிற்சிகள் கிடையாது. எனினும் எஜமானரிடம் நன்கு பழகிய சேவல் மட்டுமே களத்தில் இறக்கப்படும். 4 மாதங்கள் நீச்சல் பயிற்சியுடன் இரை யும் கொடுத்தால் மானிடனிடம் நன்கு பழகிவிடும். 

ஜல்லிக்கட்டு... 

தமிழனின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் பயன்படுத்தப்படும் காளைகளைப் பழக்குவது, பயிற்சி அளிப்பது மிகவும் சிரமமான காரியம் ஆகும். காட்டு யானை யைக் கும்கியாக மாற்றுவது எவ்வளவு சிரமமான விஷயம் என்பது உங்களுக்குத் தெரியும். அதே போலத் தான் ஜல்லிக்கட்டு காளையைப் பழக்குவது கடினமான விஷ யம். அதனை விரிவாக பார்ப்போம்...

கன்றிலிருந்து வளர்க்கப்படும் காளைகளை பழக்கப் படுத்துவது சற்று எளிதான காரியமாக இருந்தாலும், வளர வளர அதற்கும் சற்று திமிர் குணம் முளைக்கும். 2 பற்கள் (மாட்டின் வயது கணிப்பு) வளர ஆரம்பித்து விட்டால்,  காளைகள் தனியாக ஒதுங்க ஆரம்பித்துவிடும்.  சேட்டைகள் அதிகம் செய்யும். சுதந்திரமாக நடமாட முயற்சிக்கும். தனக்குப் பலபேர் உணவு மற்றும் தண்ணீர் வைத்தாலும், எஜமான் சொல்லுவதை மட்டுமே கேட்கும், அவரை மட்டுமே அருகில் வர அனுமதிக்கும். வேறு யாரா வது அருகில் நெருங்கினால் முட்டி எறிந்துவிடும். 4 பற்கள் முளைத்து விட்டால் இனிப்பான பொருட்கள் கொடுத்து மட்டுமே காளைகளைக் கட்டுப்படுத்த முடியும்.

எடுத்துக் காட்டாகக் கடலை மிட்டாய் கொடுத்தால் அவர்களைக் காளை விரைவில் அடையாளம் கண்டு விடும். பருவம டைந்த காளைகளை வாங்கி வளர்ப்பவர்கள் கடலை மிட்டாய் உத்தியைக் கையாண்டு தான் காளைகளைப் பழக்கப்படுத்துவார்கள். நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட காளைகள் வாடிவாசலில் அவிழ்த்துவிட்டாலும் எஜ மானை கூட சில காளைகள் முட்டித்தள்ளும். இதற்குக் காரணம் காளைகளின் மூர்க்கத்தனம் ஆகும்.  காலம் காலமாக வளர்க்கும் எஜமானருக்கே இந்த நிலைமை என்றால் வாடிவாசலில் காளையை அடக்கத் தயார் நிலையில் இருக்கும் காளையர்களுக்கு எத்தகைய நிலைமை உருவாகும். காளைகளுக்குச் சிவப்பு வண்ணம் பிடிக்காது. விசில் அடிக்கக்கூடாது. மிரண்டு முட்டத் தயாரா கும். யாராக இருந்தாலும் 10 மீ தூரம் தான் நிற்க வேண்டும். எஜமான் கூட தேவையில்லாமல் தொந்தரவு செய்தால் ஓட ஓட விரட்டி முட்டும். காளைகளை அடக்குவது கூட எளிது தான் ஆனால் வளர்ப்பது தான் கடினம்.
 

- சதீஸ் முருகேசன்