கிருஷ்ணகிரி, பிப். 13- ஓசூர் தேன்கனிக் கோட்டை சாலையில் ஐடிஐ பகுதி அம்மன் நகரில் 2008 ஆம் ஆண்டு சிறுவர் பூங்கா மத்திகிரி தேர்வு நிலை பேரூ ராட்சியால் அமைக்கப் பட்டது. இங்கு சறுக்கு, சீசா விளையாட்டு பலகை, ராட்டினம் உட்பட சிறுவர்கள் விளையாட்டுக்கான அனைத்து உபகரணங்க ளும், சுற்றுச்சுவர் கம்பி வேலி, ஆழ்துளை கிணறு, ஓய்விடம், படிப்பகம் ஆகிய வையும் இருந்தன. இதை சிறுவர்கள், மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் மத்திகிரி பேரூராட்சி நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு பூங்கா பாராமரிக்கப்படாமல் அனைத்து விளையாட்டு உபகரணங்களும் சேத மடைந்துள்ளன. படிப்பக அறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சிறு வர் பூங்காவை சீர்படுத்தி முறையாக பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.