மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் வட்டச் செயலாளர் அனுமப்பா தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தளி திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் துவக்கி வைத்தார். இதில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், துணைத் தலைவர் சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ், திமுக விவசாயிகள் அணி சீனிவாசன், வெங்கடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.