tamilnadu

மாற்றுத்திறனாளியை தாக்கிய காவல் ஆய்வாளர் ரவிகுமார் ஆயுத படைக்கு மாற்றம்

கிருஷ்ணகிரி, ஜூன் 7- கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அண்ணாசாலையில் டீ கடை நடத்தி வந்த மாற்றுத்திறனாளி முகமது சபீரை மூன்று நாட்களுக்கு முன்பு காவல் ஆய்வாளர் ரவிகுமார் மாமூல் கேட்டு லத்தியால் கடுமையாக தாக்கினார். தேன்கனிக்கோட்டை மாவட்ட துணை கண்காணிப்பா ளரிடம், தன்னை தாக்கிய அஞ்செட்டி காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சபீர் மனு அளித்தார். இதுகுறித்து ஆய்வு செய்த துணை கண்காணிப்பாளர் சங்கீதா, மாவட்ட கண்காணிப்பாளர் பண்டி கங்காதரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். இதையடுத்து காவல் ஆய்வாளர் ரவிகுமார் உடனடியாக ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார்.