கிருஷ்ணகிரி, ஆக. 30- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் 9ஆவது புத்தக திருவிழா சிஷ்யா பள்ளியில் 28, 29 தேதிகளில் தலைவர் துரை, ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் சேதுராமன் ஆகி யோர் வரவேற்றனர். மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன் அரங்கை திறந்து வைத்தார். கொரோனா உதவிகள் குறித்த தொகுப்பு அறிக் கையை சட்டமன்ற உறுப்பி னர் எஸ்.ஏ.சத்யா வெளி யிட்டார். கடவுள் நகர் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், துளிர் இதழ் பரிசளிக்கப்பட்டது. மேலும் கொரோனா பொதுமுடக்க காலத்தில் இலவச உணவளிக்கும் அம்மா உணவகத்திற்கு 15 லட்ச ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. புத்தக சேமிப்பு திட்டத் தில் 1,400 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் 200 பேருக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை விழா ஒருங்கிணைப்பாளர் சிவ குமார், பூபாலகண்ணன், கயல்விழி ஆகியோர் ஒருங்கி ணைத்தனர். பொருளாளர் ஸ்ரீநிவா சலு நன்றி கூறினார். இதில் பிஎம்சி டெக் கல்வி நிறு வனத்தின் செயலாளர் குமார், சிஷ்யா பள்ளி முதல் வர் வஸ்த்தி தியாகராஜன், காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்து வர் விஜயபாஸ்கர், வட் டாட்சியர் செந்தில்குமார், முன்னாள் நகராட்சி தலை வர் மாதேஸ்வரன், தொழில திபர் சந்தானம்பிள்ளை, நிர்வாகிகள் நீலகண்டன், கண்மணி, ஜெயசந்திரன், முத்து, சத்திதியமூர்த்தி, உமாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இரண்டு நாட்களில் 4,15,000 ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.