கொல்கத்தா
கடந்த வாரம் வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி அம்பன் என்ற பெயரில் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் மற்றும் வங்கதேச நாட்டின் ஹதியா தீவுகள் பகுதிக்கு இடையே கடையை கடக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அம்பன் புயலால் மேற்கு வங்கம், வங்கதேசத்திற்கு மட்டும் பாதிப்பில்லை.
புயல் கரையை கடப்பதற்கு முன்பு ஒடிசா சிக்கிம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் பலத்த புயல் காற்றுடன் கனமழை பெய்யும் எனவும், மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷா மாநிலங்களில் 160 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், நாளை கரையை கடக்க உள்ள அம்பன் புயல் இன்றே தனது ஆட்டத்தை துவங்கியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் கனமழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக வடக்கு பர்கானா மாவட்டத்தில் தற்போது பலத்த சூறைகாற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.