விக் அடியில் தங்கத்தை மறைத்து கடத்த முயற்சி செய்த கேரளா இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த நவ்ஷத் என்ற இளைஞர் ஷார்ஜாவில் இருந்து 1.13 கிலோ தங்கத்தை கடத்திக் கொண்டு கேரளா வந்துள்ளார். இதில் அந்த இளைஞன் விக் வைத்த படி அதனுள் தங்கத்தை மறைத்து நூதன முறையில் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சுங்க அதிகாரிகள் கொச்சி விமானநிலையத்தில் நவ்ஷத்தை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் நவ்ஷத்தின் பின்னால் கடத்தல் கும்பல் இருக்கலாம் என்ற ரீதியில் போலிசார் விசாரித்து வருகின்றனர்.