tamilnadu

img

மண்ணின் மணம்பரப்பும் பாட்டுகளுடன் நாற்று நடவில் கேரள மாணவர்கள்

கட்டப்பனா, செப்.1- கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத் தில் நாற்றுப்பாட்டின் ஈரடிகளில் சேற் றின் மணமறிந்தனர் மாணவர்கள்.  வலியகண்டம் சனிக்கூட்டம் வோளாண்மை கூட்டுறவு சங்கம், கிரீன் லீப் இயற்கை அமைப்பு ஆகியவற்றின் தலைமையில் கட்டப்பனா வலிய கண்டம் வயல்வெளியில் நாற்று நடல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாரம்பரிய நெல் இனமான ‘பால் தோணி’ விதையில் பிடித்த நாற்று இம் முறையும் பயன்படுத்தப்பட்டது. நாட்டு நெல்லினமான பால்தோணி மருத்துவ குணமுள்ளது. கொள்ளை நோயை தடுக்கும் சக்தி கொண்டது. நான்கு மாதங்களில் அறுவடை செய்யலாம்.  நாற்று நடவில் கட்டப்பனா அரசுக் கல்லூரி, நெடுங்கண்டம் எம்இஎஸ் கல்லூரி, கோட்டயம் கிரிஜோதி கல் லூரி, வாழத்தோப்பு கிரிதீபம் கல்லூரி, கட்டப்பனா அரசு பழங்குடியினர் பள்ளி, பணிக்கன்குடி அரசு பழங்குடியினர் பள்ளி, வெள்ளயாங்குடி சென்ட் ஜெரோம் பள்ளி, கட்டப்பனா சரஸ்வதி வித்யாபீடம், நரியாம்பாறா மணம் நினைவு பள்ளி ஆகியவற்றில் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் ஈடுபட்டனர். என்எஸ்எஸ் தொண் டர்கள் மற்றும் ஆசிரியர்களின் தலை மையில் இவர்கள் நிலத்தை தயா ராக்கும் பணியிலும் நாற்று நடவிலும் பயிற்சி பெற்றனர்.  தொடர்ச்சியாக ஒன்பதாவது முறை யாக இந்த பணியில் மாணவ மாணவி யர் களமிறங்கினர். முதன் முறை யாக சேற்றில் இறங்கும் மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்த தவற வில்லை. பரஸ்பரம் சேற்றை வாரி இறைத்தும் விளையாடியும் மகிழ்ச்சி யை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து மூத்த விவசாயிகள் எடுத்துக் கொடுத்த நாற்றுப்பாட்டுக்கு ஏற்ப பாடிக் கொண்டே நாற்று நட்டனர்.  கட்டப்பனா நகரசபை தலைவர் ஜோயி வெட்டிக்குழி நாற்று நடவை துவக்கி வைத்தார். சி.பி.ராய் நகர் மன்ற கவுன்சிலர்கள் சி.கே.மோக னன், பி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் பேசி னர்.