திருவனந்தபுரம்:
தங்கம் கடத்தப்பட்டதாக தூதரக பார்சல்கள் மூலம் என்று என்ஐஏ நீதிமன்றத்தில் தெளிவுபடுத்திய பின்னரும், இதற்கு மாறான ஒரு நிலைப்பாட்டை எடுத்த மத்தியஅமைச்சர் வி.முரளீதரனின் வாக்குமூலம் பெற வேண்டிய கட்டாயம் விசாரணைக் குழு
வுக்கு ஏற்பட்டுள்ளது.
தூதரக பார்சல்கள் மூலம் தங்கம் வரவில்லை என்ற வி முரளீதரனின் கூற்று எந்தசூழ்நிலையில் என்பதை என்ஐஏ தெளிவுபடுத்த விரும்புகிறது. இந்த விவகாரத்தை விசாரிக்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் அது நிலைக்காது என்று சட்டவல்லுநர்கள் கூறுகின்றனர். தூதரக பார்சல் களில் தங்கம் கடத்தப்படவில்லை என்று ஜூலை 8 ஆம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் வி.முரளீதரன் தில்லியில் தெரிவித்தார். ஜூலை 10 ஆம் தேதி என்ஐஏ விசாரணையை ஏற்றுக் கொண்டது.
தூதரக பார்சல் என்றால், அது ஐக்கிய அரபு அமீரகத்துடன் தொடர்புள்ள ஒரு வழக்காகிவிடும் என்று முரளிதரன் வாதிட்டார். இது நிராகரிக்கப்பட்டு, தூதரக அதிகாரிகளிடம் விசாரிக்க வேண்டும்என்று என்ஐஏ நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து இந்த விவகாரம் ஒரு வெளிநாட்டுடன் தொடர்புள்ள வழக்காக மாறியது. மத்திய துணை நிதியமைச்சர் அனுராக்தாக்கூர் நாடாளுமன்றத்திற்கு அளித்த பதிலிலும் தங்கக் கடத்தல் தூதரக பார்சலில் நடந்ததாக தெரிவித்தார். அதன்பிறகும், வி.முரளீதரன் தனது முந்தைய நிலைபாட்டையே மீண்டும் வலியுறுத்தியது மிகவும் தீவிரமானதாக விசாணைக்குழு கருதுகிறது.