tamilnadu

img

கோவிட்டை தடுக்க 3.5 லட்சம் முகக் கவசங்கள்.... கேரளா ஸ்பின்னர்ஸ் தயாரிப்புகள் விநியோகம்

திருவனந்தபுரம்:
கேரளத்தில் கோவிட்டை எதிர்கொள்ள மூன்றரை லட்சம் முக கவசங்களை அரசுக்கு சொந்தமான கோமளபுரம் கேரள ஸ்பின்னர்ஸ்நிறுவனம் தயாரித்துள்ளது. விலை குறைந்த - விரைவில் உலரும் தன்மை கொண்ட மூன்று வகையான முக கவசங்களை டெக்ஸ்டைல் கார்ப்பரேசன் வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட ‘ஜனதா மாஸ்க்’ என்கிற முக கவசத்தை தொழில்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன், நிதி அமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக்கிடம் வழங்கி விநியோகத்தை துவக்கி வைத்தார். 

உடலுக்கு தீங்கு விளைவிக்காத நிறங்களில் காற்றோட்டம் அதிகம் உள்ள இரட்டைப்ராண்டட் முக கவசங்கள் உடனடியாக விற்பனைக்கு வர உள்ளன. நூற்பாலையில் தயாரிக்கப்படும் நூலை பயன்படுத்தி அதே ஆலையிலேயே தயாரிக்கப்பட்ட துணியை பயன்படுத்தி இந்த முக கவசம் தயாரிக்கப்படுகிறது. நாள் முழுவதும் பயன்படுத்தத்தக்க ‘ஸ்கூல் மாஸ்க்’ தயாரித்து சந்தைப்படுத்த வும் கேரள ஸ்பின்னர்ஸ் முடிவுசெய்துள்ளது.

புதிய முயற்சிகள்: இ.பி.ஜெயராஜன்
உரிய நேரத்தில் திட்டங்களை தொடங்கபொதுத்துறை நூற்பாலைகளால் முடியும் எனகோமளபுரம் நூற்பாலையை பார்வையிட்ட பிறகு அமைச்சர் இ.பி.ஜெயராஜன் செய்தியாளர்களிடம் கூறினார். சுபிக்ஷ கேரளம்திட்டத்தின் கீழ் நூற்பாலை வளாகத்தில் காய்கறி சாகுபடியை அமைச்சர் துவக்கிவைத்தார். கேரள ஸ்பின்னர்ஸ்க்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் தரிசு நிலத்தில் காய்கறி உற்பத்தி செய்யப்படுகிறது. டெக்ஸ்டைல்ஸ் கார்ப்பரேசன் தலைவர் சி.ஆர்.வத்சன், நிர்வாக இயக்குநர் கே.டி.ஜெயராஜன், பொது மேலாளர் இ.பி.மாத்யூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.