திருவனந்தபுரம்:
கொரோனா வைரஸ் தொற்று சங்கிலித் தொடர்போல் பரவி வரும் நிலையில், அந்த சங்கிலிப் பின்னலை உடைக்க ‘பிரேக்தி செயின்’ என்ற திட்டத்தை, கேரள அரசுவடிவமைத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:கொரோனா வைரஸ் தொற்று, சங்கிலித் தொடர்போல் பரவி வருகிறது. எனவே,அந்த சங்கிலிப் பின்னலை உடைக்க `பிரேக்தி செயின்’ என்ற திட்டத்தை ஏற்படுத்தியுள்ளோம். இந்தத் திட்டத்தின்படி அனைத்துஅரசு, தனியார் நிறுவனங்களிலும் நுழைவுப்பகுதியில் ஒரு பூத் ஏற்படுத்த வேண்டும்.நிறுவனங்களுக்குள் நுழையும் ஒவ்வொருவரும் அந்தப் பூத்தில் சென்று கைகளைக் கழுவிக்கொண்டோ அல்லது ஹேண்ட் சானிட்டிசர் (Hand Sanitizer) உபயோகித்துக் கொண்டோதான் உள்ளே நுழைய அறிவுறுத்த வேண்டும். இதனால் கொரோனா வைரஸ் பிறருக்குப் பரவுவதை தடுக்க முடியும். அரசு நிறுவனங்கள், வங்கிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பிளாட்டுகளில் இந்தப் `பிரேக் தி செயின்’ பூத்துகள் அமைக்கப்பட வேண்டும்.” என்று ஷைலஜா குறிப்பிட்டுள்ளார்.